தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Paris Olympic, Shooting: 10மீ ஏர் பிஸ்டல் போட்டி..தங்கத்தை நெருங்கிய இளம் வீராங்கனை மனு பாக்கர்! இறுதிப்போட்டிக்கு தகுதி

Paris Olympic, Shooting: 10மீ ஏர் பிஸ்டல் போட்டி..தங்கத்தை நெருங்கிய இளம் வீராங்கனை மனு பாக்கர்! இறுதிப்போட்டிக்கு தகுதி

Jul 27, 2024, 11:13 PM IST

கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய துப்பாக்கி சுடுதல் நட்சத்திர வீராங்கனையான மனு பாக்கர், மூன்று வருட இடைவெளிக்கு பிறகு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கத்தை நெருங்கியுள்ளார்

  • கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய துப்பாக்கி சுடுதல் நட்சத்திர வீராங்கனையான மனு பாக்கர், மூன்று வருட இடைவெளிக்கு பிறகு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கத்தை நெருங்கியுள்ளார்
பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார் மனு பாக்கர். 22 வயதாகும் இவர், பெண்களுக்கான 10 ஏர் பிஸ்டல் ரைபிள் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இது தங்கப்பதக்கத்துக்கான போட்டியாக அமைகிறது
(1 / 5)

தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 580 புள்ளிகளை பெற்றார். இந்த போட்டியில் ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் முதலிடம் பிடித்தார். தென் கொரியாவின் ஜின் யே ஓ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இருவரும் 582 என ஒரே புள்ளிகளை பெற்றிருந்தனர். அதிக உள் பத்து புள்ளிகளின் காரணமாக, வெரோனிகா முன்னிலை பெற்றார்
(2 / 5)

மனு மொத்தம் ஆறு தொடர்களில் முறையே 97, 97, 98, 96, 96 மற்றும் 96 புள்ளிகள் எடுத்தார். மொத்தம் 60 ஷாட்களில் 27 ஷாட்கள் உள்ளே இழுக்கப்பட்டன. ஒரே ஒரு ஷாட் எட்டு புள்ளியாக அமைந்தது. 43வது ஷாட்டில் இது நிகழ்ந்தது. அடுத்த ஷாட்டில் கம்பேக் கொடுத்து 10 புள்ளிகள் எடுத்தார் மனு பாக்கர். முதல் நாளில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மற்ற துப்பாக்கி சுடுதல் வீரர்கள், வீராங்கனைகள் வெளிப்படுத்தாத நிலைத்தன்மையான ஆட்டத்தை மனு பாக்கர் வெளிப்படுத்தினார்
(3 / 5)

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற ஏமாற்றம், காயங்களுக்கு ஆறுதலாக பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பெற்ற வெற்றி மாறியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றின் போது மனுவின் கைத்துப்பாக்கி பழுதடைந்தது. இதனால் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம் காரணமாக கனவு கலைந்து தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறினார்
(4 / 5)

"இது எனது முதல் ஒலிம்பிக். நான் கடுமையான அழுத்தத்தில் இருந்தேன். என்னால் இரவில் தூங்க முடியவில்லை. இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் நினைத்தது போல், என்னால் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. பகலில் கூட நான் மிகவும் பதட்டமாக இருந்தேன்" என டோக்கியோ தோல்விக்கு பிறகு மனு பாக்கர் கூறினார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது கனவை நோக்கி அடுத்த படியை எடுத்து வைத்துள்ளார்
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை