தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Sona: ‘7 வருட காதல்.. அவன் என்ன உடம்ப படுத்திய பாட்ட எப்படி?.. தினம் தினம் வேதனைதான்’ - நடிகை சோனா!

Actress sona: ‘7 வருட காதல்.. அவன் என்ன உடம்ப படுத்திய பாட்ட எப்படி?.. தினம் தினம் வேதனைதான்’ - நடிகை சோனா!

Jul 21, 2024, 06:00 AM IST

Actress sona: அங்கேயே மொத்தமாக அழுது முடித்துவிட்டு, வந்து விடுவேன். அங்கிருந்து வெளியே வரும்பொழுது சிரித்துக் கொண்டுதான் வருவேன். - நடிகை சோனா!

Actress sona: நடிகை சோனா திரைத்துறையில் தான் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து, பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த வருடம் பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி இங்கே!கிளாமர் என்பது என்ன? அதில் அவர் பேசும் போது, “கிளாமர் என்பது வெறும் தோலை காட்டுவது மட்டும் கிடையாது. உண்மையில், கிளாமர் என்பது உங்களது கண்களின் வழியே கடத்தப்படுவது. உங்களது பாடி லாங்குவேஜில் அது வெளிப்பட வேண்டும். ஒரு பெண் அழகாக நடந்து வருகிறாள் என்றால், நீங்கள் அவளை நிச்சயமாக பார்ப்பீர்கள். அந்த பாடி லாங்குவேஜ்தான் முக்கியம்.என்னை பொருத்தவரை, அதுதான் கிளாமர் என்று நினைக்கிறேன். இது தவறாக கூட இருக்கலாம்.  
(1 / 6)

அழுது முடித்து விடுவேன் ஆணோ, பெண்ணோ அவர்கள் தத்தமது கற்பை இழப்பது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. என்னுடைய வாழ்க்கையிலும், அது தொடர்பாக நிறைய விஷயங்கள் நடந்து இருக்கிறது. நானும் அழுது இருக்கிறேன். ஆனால், அவை எல்லாம் என்னுடைய படுக்கை அறை வாசல் வரை தான். ஆம், அங்கேயே மொத்தமாக அழுது முடித்துவிட்டு, வந்து விடுவேன். அங்கிருந்து வெளியே வரும்பொழுது சிரித்துக் கொண்டுதான் வருவேன். காரணம், நீங்கள் ஒருவரை பழி வாங்க வேண்டும் என்றால், நீங்கள் அவர்கள் என்ன செய்தாலும் சிரித்துக்கொண்டே இருங்கள். எதிர் தரப்பில் இருக்கும் அவர் எரிச்சல் அடைந்து விடுவார். அதைத்தான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.  
(2 / 6)

காதல் கதைநானும் ஒரு பையனை ஏழு வருடங்களாக காதலித்தேன். எல்லாம் நல்லபடியாக நடந்து, அந்த உறவு நிச்சயம் வரை சென்றது. ஆனால் அவனிடம் இருந்து எனக்கு உடல் ரீதியான தொல்லைகள் மிகவும் அதிகமாகி விட்டன. நான் அவனை மிகவும் காதலித்தேன். அவனும் என்னை மிகவும் காதலித்தான். ஆனால், அவன் வன்முறையாக தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தான்.   
(3 / 6)

பெரும்பான்மையான நேரங்களில் அவனுடன் இருக்கும் பொழுது நான் அழுது கொண்டே தான் இருந்தேன். அப்படி இருக்கும் பொழுது, அந்த ரிலேஷன்ஷிப்பில் தொடர்ந்து எப்படி இருக்க முடியும் என்று சொல்லி, அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். 
(4 / 6)

நான் அதில் செய்த தவறு என்னவென்றால், அவன் என்ன செய்தாலும், இது சரியாகிவிடும், நின்று விடும் என்று நினைத்துக் கொண்டு கடந்து கொண்டே இருந்தது தான். 
(5 / 6)

காரணம் அவனை கல்யாணம் செய்து, நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அந்த காதலுக்கு பின்னர் எனக்கு காதல் மீது இருந்த நம்பிக்கையே சுத்தமாக போய்விட்டது.” என்று பேசினார்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை