(2 / 6)சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தணர் - கஸ்தூரிசிவச்சாரியர் ஒருவர் சொன்னார், இத்தனை நாட்கள் நாம் சாத்வீகமாக இருந்துட்டோம் என்று. ஐயா, இல்லை ஐயா, சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தணர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறின்னு சொல்றாங்க. யார் வந்தேறி. கைபர், போலான் கணவாய் மூலமாக வந்த பல சமயங்கள் சார்ந்தோர் வந்தாங்க. அவர்களைப் பற்றியெல்லாம், பேசினால், உங்கள் ஓட்டு தான் குறையும்.நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வந்ததாகச் சொல்லப்படுபவர்களை வந்தேறி எனச் சொல்கிறீர்களே, சங்க காலம் முதல் தமிழர்கள் கோயில்களில் சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள்.எப்படி ஆரியப் பண்பாடு தமிழகத்துக்குள் வரும்போது ஷத்திரியர்கள் எனும்போது வன்னியர்களும் தேவர்களும் இணைந்துகொண்டார்களோ., வைஷ்யர்கள் என்ற பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்துகொண்டார்களா., அதேபோல் கோயில் பணிகளைச் செய்ய சிவச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள், பண்டாரத்தினர், சைவப் பிள்ளைமார்கள் ஆகியோர் இணைந்துகொண்டார்கள்.