(3 / 5)இதில், அந்தப்பெண்ணின் கேரக்டர் பற்றிய அவதூறு பேச்சு உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும். அட்ஜஸ்மென்டை பொறுத்த வரை, அது சினிமாத்துறை மட்டுமல்ல. பல்வேறு துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. ஒரு பெண் விவாகரத்து செய்து விட்டு வந்து விட்டால், உடன் இருக்கும் நண்பர்களே அவளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சிலர் காப்பாற்றுவார்கள்.ஆணாகவும், பெண்ணாகவும்இன்னும் சில பெண்கள், தன்னுடைய கணவரை அந்த மாதிரியான பெண்களோடு பழகவிடமாட்டார்கள். எனக்கு அப்பா கூட கிடையாது. ஆகையால், என்னை நான் ஒரு பெண்ணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆணாக இருந்தும் பார்த்துக்கொள்ள வேண்டும்.உங்களது கேரக்டரை ஒருவர் அவதூறாக பேசினால் நீங்கள் வீக் ஆகி விடுவீர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அப்படி கிடையாது. நீங்கள் தைரியமாக இருக்கலாம். பார்க்கிறவர்கள் பார்வை தவறாக இருந்தால் அது அவர்களின் பிரச்சினை. அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது.