தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கங்குவா இப்போ இல்லாட்டி எப்போ.. பாதை போட்டவர் கமல் சார்.. பயணிப்பது ஈஸி.. சூர்யா உருக்கமான பேச்சு

கங்குவா இப்போ இல்லாட்டி எப்போ.. பாதை போட்டவர் கமல் சார்.. பயணிப்பது ஈஸி.. சூர்யா உருக்கமான பேச்சு

Nov 07, 2024, 01:46 PM IST

கங்குவா இப்போ இல்லாட்டி எப்போ.. பாதை போட்டவர் கமல் சார்.. பயணிப்பது ஈஸி.. நடிகர் சூர்யா உருக்கமாகப் பேசியுள்ளார்.

  • கங்குவா இப்போ இல்லாட்டி எப்போ.. பாதை போட்டவர் கமல் சார்.. பயணிப்பது ஈஸி.. நடிகர் சூர்யா உருக்கமாகப் பேசியுள்ளார்.
இப்போது பண்ணாமல் எப்போது அப்படிங்கிற கேள்வி தான் வந்து, கங்குவா வருவதற்கான காரணம் என நடிகர் சூர்யா கூறியுள்ளார். சென்னையில் கங்குவா படத்தின் 3D ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் சூர்யா பேசினார். அதில் நடிகர் சூர்யா உரையாற்றுகையில், ‘’நானும் சினிமாவில் இருக்கேன் என்றால் சகலகலா வல்லவன் கமல் சார் தான். அவர் உடைய பிறந்த நாள் இன்னைக்கு. 1980-ல் ராஜபார்வை வந்தது. இப்போது எல்லோரும் கொண்டாடுறோம். அப்போது நடந்ததை விசாரித்தது வரைக்கும் பார்த்தால், அந்தப் படத்துக்கு வணிக வெற்றி கிடைக்கல. உடனே, அடுத்த வருஷம் 1981-ல் ‘ஏக் துஜே கேலியே’- முதல் பான் இந்தியப் படம் கமல்ஹாசன் சார் செய்றார். அதே வருஷம் மூன்றாம் பிறையில் நடிக்கிறார்’’.
(1 / 6)

'ஒரே வருஷத்தில் வந்து நாயகன் திரைப்படம் பண்றார். சத்யா பண்றார். பேசும்படம் என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். பெர்ஷனல் லைஃப்பிலும் ஒரு பெரிய கான்ஃபிளிக்ட்டை அதே வருஷம் செய்யிறார். சிங்காரவேலன் பண்றார். அதே வருஷம் தேவர் மகன் பண்றார்.2008-ல் வாரணம் ஆயிரம் பண்ணிட்டு போய், கமல்ஹாசன் சாரிடம் காண்பிக்கப்போறேன். என்னைவிட இருபது வயது மூத்தவரு. அப்போது ஐம்பது வயசுக்கு மேல் அவருக்கு வயது கண்டிப்பாக இருக்கும். அப்போது தசாவதாரம் பண்ணிட்டு இருக்கேன்னு 10 வேஷத்தையும் என்கிட்டப் போட்டுக் காண்பிக்கிறார்'.
(2 / 6)

8 மொழி பேசுவார் - சூர்யா'8 மொழி பேசுவார். ஸ்கூல் டிராப் அவுட். ஆனால், கத்துக்கிறதை வந்து அவர் நிறுத்தவே இல்லை. நார்த் முதல் சவுத் வரைக்கும் அத்தனை கிரியேட்டர்ஸ், அத்தனை டைரக்டர்ஸ், அத்தனை ஆக்டர்ஸ், ஃபிலிம் இண்டஸ்ட்ரியில் பாதைபோடுறது ரொம்ப முக்கியம். பயணிக்கிறது ரொம்ப ஈஸி. என்னோட உலக நாயகனுக்கு வெற்றி பத்தியோ, ஜெயிக்கிறதைப் பற்றியோ சொல்ல அவசியம் இல்லை. ரொம்ப ஆரோக்கியமாக, ரொம்ப சந்தோஷமாக வெகுநாட்கள் நம்மளோடு அவர் இருக்கணும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கமல் சார்.எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், அவர் எடுத்துக்கிட்ட ஒவ்வொரு முயற்சியும் வந்து தமிழ் சினிமாவுக்கு அடையாளமாக இருந்திருக்கு. தமிழ் சினிமாவை முக்கியமாக முன்னெடுத்துப்போனது கமல் சார் அவர்கள். பாதை போடுறது முக்கியம். பயணிக்கிறது ரொம்ப சுலபம்'.
(3 / 6)

‘’சந்திரலேகா, அவ்வையார் எடுத்தாங்க. கர்ணன் எடுத்தாங்க. ராஜமெளலி சார் பாகுபலி எடுத்தாங்க.தமிழில் மறுபடியும், இந்த காலகட்டத்தில் அந்த அனுபவத்தைத் தரும் சினிமாவைத் தர நான் இருக்கேன். சிவா இருக்காங்க. எல்லோரும் இருக்கும்போது, இப்போது பண்ணாமல் எப்போது அப்படிங்கிற கேள்வி தான் வந்து, கங்குவா வருவதற்கான காரணம்.அந்தப் பாதை போடுறதுக்கு ரொம்ப முக்கியமாக இருந்தது ஞானவேல். ஞானவேல் இல்லாமல் இதை நான் ஆரம்பிச்சிருக்கவே முடியாது. அதை க்ரீன் சிக்னல் பண்ணுனது வந்து ஞானவேல்''.
(4 / 6)

நானும் புரொடியூசர் தான்.. என்னால் சாத்தியப்படுத்தமுடியாது: சூர்யா‘’பச்சைன்னு கூப்பிடலாம். விமர்சனம் பண்ணலாம். சில வார்த்தைகள் விடுவார். அவங்க மனைவிகிட்ட சொல்லி காதைப் பிடிச்சு திருகி, வால்யூமை கம்மி பண்ணச் சொல்லுங்கன்னு சொல்லுவேன். ஆனால், இந்தப் படம் ஊர் கூடித் தேர் இழுக்கிற மாதிரி தான். நானும் புரொடியூசர். என்னால் இதை சாத்தியப்படுத்தியிருக்க முடியுமா என்றால் அது தெரியாது. இருக்கிற எல்லா தயாரிப்புத்தரப்பு நண்பர்கள் எல்லார்கிட்டேயும்பேசி, இந்தப் படம் பண்றோம். யுவி கிரியேஷனிலும் சரி, மும்பையில் ஜெயந்தி லால் கட்டா சாரிடமும் சரி, கேரளாவில் போய் கோகுலம் சினிமாஸ் ஆகட்டும், ஒஆர்எஃப் ஆகட்டும். இந்தப் படத்தை ஒன்னு சேர்க்கிறதுக்கு ஞானவேல் எடுத்துக்கிட்ட மன உறுதி எனக்குத் தான் தெரியும்.''
(5 / 6)

‘’மண்டைக்குள் எவ்வளவு போர் பார்த்திருப்பான். இந்த நாள் வர்றதுக்காக இரண்டு வருஷம், மூணு வருஷம் எவ்வளவு பல்லைக் கடிச்சிட்டு இருந்திருப்பான் என்பது எனக்கு மட்டுமே தெரியும். ரசிகர்களாகிய நீங்கள், ஞானவேல் இல்லாமல் நான் இங்கு இல்லவே இல்லை.எப்போதுமே நம்மளைப் பற்றி நாம் நினைப்போம். நம்மளோட உயர்வைப் பற்றி நினைப்போம். நம்மளோட வெற்றியைப் பற்றி நினைப்போம். நம்ம குடும்பத்தைப் பற்றி மட்டுமே நினைப்போம். ஆனால், ரசிகர்களாகிய நீங்கள், ஞானவேல் மட்டும் தான் நான் ஜெயிக்கணும்னு நினைச்சிட்டே இருக்கீங்க. இதை தாய்ப்பாசம் மாதிரி தான் நான் பார்க்கிறேன். எனக்கு அதைச் சொல்ல வேறு வார்த்தை தெரியலை’’ என முடித்துக்கொண்டார், நடிகர் சூர்யா''
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை