(2 / 6)இறையன்பு ஐ.ஏ.எஸ். ஐயா அவர் தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்தவர். அவர் சுற்றுலாத்துறை செயலாளராக இருந்தபோது, நாங்க ஒரு கான்செஃப்ட் கொடுத்திருந்தோம். அதை அவர் பிடிச்சுப்போய் அப்ரூவல் பண்ணுனார். அவர் தான் நன்றாக ஊக்கப்படுத்தினார். இன்னிக்கு வரைக்கும் இந்த விஷயத்தை நான் பண்றேன் என்றால், அதுக்கு அவர் தான் காரணம்.’இரண்டு பேருமே பிஸியான நடிகர்கள். அதையெல்லாம், தாண்டி கண்காட்சி பண்ணனும்னு நினைச்சது எப்படி?ரெடின்கிங்ஸ்லி: கண்காட்சி அமைக்கிறதுதான் என்னோட வேலை. அதுக்கப்புறம் தான் சினிமாவுக்கே போனேன். நான் இந்த துறைக்கு 15 வருடங்களில் 80 முதல் 90 கண்காட்சி பண்ணியிருப்பேன். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க.. சென்னையில் பனிமலை கொண்டாட்டம், அமர்நாத் லிங்கம், இதெல்லாமே நான் பண்ணுனதுதான்.நீருக்கடியில் இருக்கும் மீன் உலகம் இதெல்லாம் நான் பண்ணுனதுதான். வருஷத்துக்கு ஏதாவது மாத்திட்டே இருக்கணும். இந்த தடவை, கல்யாணம் முடிச்சிட்டு துபாய் போய் இருந்தோம். அங்கே பார்த்தால், துபாய் குளோபல் வில்லேஜ்னு ஒன்னு இருக்கு. எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கும். 50-யில் இருந்து 100 ஏக்கரில் துபாய் அரசு அதை பண்ணியிருக்காங்க. அது ஒருநாளில் பார்க்கமுடியாது. மூன்று முதல் நான்கு நாட்கள் பார்த்தால்தான் முழுமையாகப் பார்க்கமுடியும். அந்த டைமில், என் வொய்ஃப் தான் சொன்னாங்க. அப்படி பண்ணுனதுதான், சென்னையில் துபாய் குளோபல் வில்லேஜ் மாதிரி.