(6 / 6)பிரியங்கா மோகனோட கியூட் ரியாக்ஷன் - ஜெயம் ரவி!எனது அண்ணன் இயக்குநராக வருவதற்கு முன்பே, அவரோட குறும்படம் பார்த்துட்டு, நல்ல இயக்குநராக வருவார்னு ஹாரிஸ் ஜெயராஜ் சார் சொன்னார்.பிரியங்கா மோகனோட கியூட் ரியாக்ஷன், இந்தப் படத்தில் நிறைய இருக்கு. அவங்க அலும்பு பண்றது ஜாலியாக இருக்கும். ஒன்றாக ஃபுட் பால் மேட்ச் ஊட்டியில் பார்த்திருக்கிறோம்.சரண்யா மேம், ஒரு சின்ன ஷாட்டாக இருந்தாலும், அதற்கு தயாராகி, ஒரு ஜென் மனநிலையில் அதை நடிச்சுக்காட்டுவாங்க. மேக்கப் பேக் வைச்சிக்கிறமாட்டாங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். சுந்தர் சார், எவ்வளவோ பிரச்னைகள் ஒரு சில படங்களில் வந்திருக்கு. அதையெல்லாம் சமாளிச்சிருக்கோம். அவரோட எல்லாப்படங்களும் நன்றாக வரணும். அடுத்து, மூன்றாவது படமும் நாம் சேர்ந்து செய்யணும்.நட்டி சார், என் படத்தில் இருந்தால் அவர் வில்லனா, காமெடி பண்ணியிருப்பாரான்னு ஜனங்க யோசிப்பாங்க. அது அரிதாக கிடைக்கிற விஷயம். தயவு செய்து அதை எங்களுக்குக் கத்துக்கொடுங்க. ராவ் ரமேஷ் சார், ஆந்திராவில் பெரிய நடிகர். தெலுங்கு கொஞ்சம் தெரியும். அவர்கிட்ட பேசலாம்னு நினைக்கும்போது தமிழில் பேசினார். அடுத்துதான் சொன்னார், நான் இங்க பிறந்த பையன்னு சொன்னார். அவரோட தமிழ் உச்சரிப்பு அழகாக இருந்துச்சு. விடிவி கணேஷ் சார், ஒன்னு படம் முழுக்க பண்ணி வைச்சிருக்கார். இந்த விழாவில் எல்லோருக்கும் நன்றி கூறிக்குறேன்''என்றார், நடிகர் ஜெயம் ரவி.