தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பார்த்த உடனே பத்திக்கிச்சு.. உறவினர் வீடு போட்ட முடிச்சு.. கரைபுரண்ட காதல்! -சின்னி ஜெயந்த் காதல் கதை

பார்த்த உடனே பத்திக்கிச்சு.. உறவினர் வீடு போட்ட முடிச்சு.. கரைபுரண்ட காதல்! -சின்னி ஜெயந்த் காதல் கதை

Nov 10, 2024, 02:32 PM IST

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாகப் போனதே கிடையாது. அந்த அளவு மற்றவர்களின் நேரத்தை அவர் மதிப்பார். - சின்னி ஜெய்ந்த் மனைவி

பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்தும் அவரது மனைவியும் தங்களுடைய காதல் கதையை கலாட்டா யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து இருக்கிறார்கள். காதல் திருமணம் தான்சின்னி ஜெயந்த் மனைவி பேசும் போது, “எங்களுடைய திருமணம் காதல் திருமணம் தான். ‘கண்டதும் காதல்’ என்று சொல்வார்கள் இல்லையா? அதுபோலத்தான் எங்களுக்குள் அது இயல்பாக நடந்தது. ஆனால், சொல்வதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. சரியான நேரம் வந்தவுடன், நாங்கள் காதலை சொல்லி விட்டோம். முதன் முதலில் என்னுடைய உறவினர் வீட்டில் தான் இவரை பார்த்தேன்.” என்றார்  சின்னி ஜெயந்த் பேசும் போது “ நான் அந்த வீட்டிற்கு விருந்தினராக போயிருந்தேன். அப்போதுதான் இவளை பார்த்தேன். அதன் பின்னர் பெற்றோர்களிடம் பேசி எங்களது திருமணம் நடைபெற்றது.” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே... தொடர்ந்த அவரது மனைவி, “அவர் வீட்டில் மிக மிக ஒழுக்கமாக  இருப்பார். அந்த பழக்கம் எங்களுடைய குடும்பத்தினர் எல்லோருக்குமே வந்து விட்டது.
(1 / 6)

நேரம் பொன் போன்றதுஅவர் அவரது படப்பிடிப்புகளுக்கும், மேடை நிகழ்ச்சிகளுக்கு மிக சீக்கிரமாக சென்று விடுவார். அப்போது, இவரிடம் இவ்வளவு சீக்கிரம் ஏன்.. இன்னும் பார்வையாளர்களே வந்திருக்க மாட்டார்கள் என்று சொன்னால், நான் முதலில் சென்று உட்கார்ந்து கொள்கிறேன் என்று கூறுவார். 
(2 / 6)

இதுவரை அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாகப் போனதே கிடையாது. அந்த அளவு மற்றவர்களின் நேரத்தை அவர் மதிப்பார்.” என்று பேசினார்.அப்போது பேசிய சின்னி ஜெயந்த், “யாருக்கும் கிடைக்காத ஒரு விஷயம் நமக்கு கிடைத்திருக்கிறது. அதை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம்.” என்றார்.
(3 / 6)

இதனையடுத்து பேசிய மனைவி, “ இவர் நடித்ததில் எனக்கு மிக மிக பிடித்த படம் முரளி நடித்த ‘இதயம்’ திரைப்படம். அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ஹீராவின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் வடிந்து, அங்கு இருக்கும் வாட்டர் பாட்டிலில் விழும். முன்பு, முரளி சாரை பார்க்கும் பொழுது, நாங்கள் அதைப் பற்றி எல்லாம் பேசுவது உண்டு. சோசியல் மீடியா இல்லாத அன்றைய காலகட்டத்தில், இயக்குநர் கதிர் அந்த திரைப்படத்தை அவ்வளவு உணர்வு பூர்வமாக எடுத்திருந்தார். ” என்று பேசினார்   
(4 / 6)

சின்னி பேசும் போது, “உண்மையில் இதயம் திரைப்படத்தில் என்னுடைய கனவு நிறைவேறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், எனக்கு சின்ன வயதில் டாக்டராக வேண்டுமென்று ஆசை இருந்தது. அந்த படத்தில் நாங்கள் மருத்துவ கல்லூரி மாணவராக நடித்திருப்போம் அதன் மூலம் என்னுடைய அந்தக்கனவு நிறைவேறியது.” என்று பேசினார்.
(5 / 6)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை