தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Arvind Swamy: நமது தவறை ஒத்துக்கினும்.. மற்றவர்களால் தான் இப்படி ஆச்சுன்னு நினைத்தால் கத்துக்க முடியாது: அரவிந்த் சுவாமி

Arvind Swamy: நமது தவறை ஒத்துக்கினும்.. மற்றவர்களால் தான் இப்படி ஆச்சுன்னு நினைத்தால் கத்துக்க முடியாது: அரவிந்த் சுவாமி

Sep 19, 2024, 04:01 PM IST

Arvind Swamy: நமது தவறை ஒத்துக்கினும் என்றும், மற்றவர்களால் தான் இப்படி ஆச்சுன்னு நினைத்தால் கத்துக்க முடியாது என அரவிந்த் சுவாமி பேட்டியளித்துள்ளார். 

  • Arvind Swamy: நமது தவறை ஒத்துக்கினும் என்றும், மற்றவர்களால் தான் இப்படி ஆச்சுன்னு நினைத்தால் கத்துக்க முடியாது என அரவிந்த் சுவாமி பேட்டியளித்துள்ளார். 
Arvind Swamy : என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் அதை நான் ஊக்குவிக்கமாட்டேன் என நடிகர் அரவிந்த் சாமி பேட்டியளித்துள்ளார்.நடிகர் அரவிந்த் சுவாமி மெய்யழகன் பட புரோமோஷனுக்காக, தொகுப்பாளர் கோபிநாத் அவர்களின் யூட்யூப் சேனலுக்கு அளித்த விரிவான பேட்டியில் இருந்து சில முக்கியமான கேள்வி பதில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.கோபிநாத்தின் கேள்வி: படத்தின் பெரும்பகுதி பட்ஜெட் ஹீரோக்களுக்கே போகுது என தயாரிப்பாளர்கள் அடிக்கடி குறை சொல்றாங்க. இதை எப்படி பார்க்குறீங்க.அரவிந்த் சாமி பதில்: எனக்குப் புரியல. நான் கேள்விப்பட்டிருக்கேன். இங்கே யாரையுமே யாரையும் வற்புறுத்தல. மார்க்கெட் இருக்குதோ இல்லையோ. அவர் கேட்கிறார். நீங்கள் கொடுப்பீங்கன்னு ஒத்துக்கிட்டீங்க. நான் கொடுக்கமாட்டேன், வேறயாரோ ஒருவரை வைச்சு படம் எடுக்கிறதா சொல்லலாம். ஒரு நடிகருக்கு நிறையப் படங்கள் வராட்டி, அவர் தன்னாலே படத்தின் சம்பளத்தைக் குறைக்கப்போறார். புரொடியூசருக்குத் தான் அது தெரியணும். இங்கே யாரும் யாரையும் வற்புறுத்தல. என்ன பட்ஜெட் அப்படிங்கிறதை தீர்மானிக்கிறது ஒரு புரொடியூசர். எப்படி ஃபைனான்ஸ் பண்ணப்போறேன்னு தீர்மானிக்கிறது ஒரு புரொடியூசர். எப்போது ரிலீஸ் பண்ணப்போறேன்னு தீர்மானிக்கிறது புரொடியூசர். அதே மாதிரி பெரிய நடிகர்கூட படம் பண்ணனுமா வேண்டாமான்னு முடிவு எடுக்கும் உரிமை புரொடியூசருக்கு இருக்கு. அந்தப் படத்தில் நடிக்கவா அல்லது வேண்டாமா என முடிவு எடுக்கும் சுதந்திரமும் நடிகருக்கு இருக்குது.
(1 / 7)

கேள்வி: அடுத்தவங்க நம்மளை மதிக்கணும் நினைக்கிறதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?பதில்: நான் ஒரு பொருள் வாங்கும்போது எனக்காக தான் வாங்குறேன். மத்தவங்களுக்காக வாங்கலை. அப்படி நான் மத்தவங்க மதிக்கணும்கிறதுக்காக ஒரு பொருள் வாங்கினால், அது பிரச்னை தான்.
(2 / 7)

கேள்வி: அடுத்தவங்களோட மதிப்பு நமக்குத் தேவையில்லை என்பதைப் புரிய நான் எதைப் புரிஞ்சால், நான் அதை உணரமுடியும்?பதில்: நிறையபேர் சம்பளத்துக்காகத் தான் வேலைக்குப் போகுறாங்க. அந்த வேலையில் ஆர்வத்தோடு பண்றது மிக குறைவான பேர் தான். இந்தச் சூழ்நிலையில் இருக்கும்போது, ஒரு கட்டத்தில் நாம் பிறரின் அழுத்தத்துக்கு உட்பட்டு சகிப்புத்தன்மையோடு வேலைபார்ப்போம். அப்படியொரு சூழ்நிலை வரும்போது, உன்கிட்ட சேமிப்பு இல்லை. ஏனென்றால், நீ அன்றன்று சம்பாதிக்கிறதை செலவழிச்சுட்ட. இப்போது எனக்கு ஒரு வருஷத்துக்குண்டான சம்பளம் இருந்தது என்றால், வேலையைவிட்டுட்டு இன்னொரு வேலைக்கு முயற்சிக்கலாம். அந்த சுதந்திரத்தை சேமிப்பு கொடுக்கும். தேவையில்லாத விஷயத்துக்கு கடன் வாங்கக் கூடாது.
(3 / 7)

கேள்வி: ரசிகர் மன்றங்கள் பற்றி?பதில்: எனக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கி என்ன செய்யப்போகிறார்கள். ரசிகர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்குமோ? நான் சினிமாவை விட்டு விலகினால் அவர்கள் என்ன செய்வார்கள்? என்ற கேள்விகள் எனக்குள் உண்டு. என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால், நான் அதை ஊக்குவிக்க மாட்டேன். அப்படி இருக்கும்பட்சத்தில் என் மகனுக்கு ஒரு அட்வைஸ், ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸை என்னால் எப்படித் தரமுடியும்.
(4 / 7)

கேள்வி: கடன் வாங்காமல் பிசினஸ் செய்யமுடியாதுன்னு சொல்றாங்களே?பதில்: நான் வாழ்க்கையில் பிசினஸில் இதுவரை கடன் வாங்கியது கிடையாது. கடன் வாங்கி பிசினஸ் செய்றதை தப்புன்னு சொல்லல. ரொம்ப கவனமாக இருக்கணும்.கேள்வி: வாழ்க்கையில் எனக்கு மட்டும் இவ்வளவு சோதனை வருதேன்னு வெறுப்பு வருதே. அதைப் பற்றி?பதில்: இதை லாஜிக்கலாகப் பார்க்கணும். எதனால் இப்படி நடந்துச்சு அப்படின்னு பார்க்கணும். அதைவிட்டுவிட்டு எனக்கு மட்டும் இப்படி ஆகுதுன்னு பார்க்கிறீங்க என்றால், நீங்கள் எமோஷனல் ஆகுறீங்கன்னு அர்த்தம். உடனே, எனக்கு இப்படித்தான் ஆகுதுன்னு ஃபிக்ஸ் பண்ணிக்குறீங்கன்னு அர்த்தம். அப்படி இருக்கக்கூடாது. சரியாக நடக்கலைங்கிறதை முதலில் ஒத்துக்கிறனும். நமது தவறை ஒத்துக்கிறனும். நான் தப்ப பண்ணமாட்டேன். மத்தவங்கனால் தான் இப்படி ஆச்சுன்னு நினைச்சால், கத்துக்க வாய்ப்பே இல்லை.
(5 / 7)

கேள்வி: நம்மைப் பற்றி?பதில்: சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டை மீறி நடந்திருக்கும். அதற்கு நாம் மிகுந்த முயற்சி எடுத்திருக்கணும். பிரபஞ்சத்தில் 200 பில்லியன் டிரில்லியன் நட்சத்திரங்கள், சிறுகோள்கள், கருந்துளைகள் இருக்கு. பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒருசிறு துகள் மாதிரி தான்.இந்த பூமியில் நான் ஒரு பெரிய நடிகன். நீங்க ஒரு பெரிய இண்டர்வியூவர். ஃப்ரெண்ட் சண்டைபோட்டது எல்லாம் பெரிய விஷயம் நினைக்குறோம். நாம் இருக்கிறதை, இந்த பிரபஞ்சத்துக்குத் தெரியாது. இதில் நான் என்ன சாதி, நீ என்ன சாதி, நான் பெரியவன், நீ பெரியவன், இப்படியெல்லாம் நடக்குதே, இந்த கோணத்தில் எல்லாத்தையும் பார். உன் கஷ்டத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் சம்பந்தம் இருக்கா?
(6 / 7)

கேள்வி: சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவது பற்றி?பதில்: சினிமாவில் இருந்து வருவதால் பலருக்கும் தெரியும். நோக்கம் சரியாக இருந்தால் எங்கு இருந்துவேண்டுமென்றாலும் வரலாம். அதற்கு நன்கு முன் தயாரிப்புகளோட இருந்து,மக்களை ஏற்றுக்கொள்ளும்படி நம்பிக்கை விதைத்தால் அது ஓட்டாக மாறும்.கேள்வி: நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்பதில்: சைக்காலாஜி ஆஃப் மணி, வாக்குலார் ஸ்பில் அவர்களோட புக்ஸ் பிடிக்கும். ஹவ் தி வெர்ட்ல்டு ரியலி வொர்க்ஸ், செல்ஃபிஸ் ஜீன் போன்ற புத்தகங்கள் ஆர்வம் கிடைக்கும்போது எடுத்துப் படிப்பேன்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை