தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Arshad Nadeem: 'கத்திரிக்கோலால் செய்யப்பட்ட ஈட்டி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இறைச்சி’: வெறியேற்றும் அர்ஷத் நதீமின் கதை!

Arshad Nadeem: 'கத்திரிக்கோலால் செய்யப்பட்ட ஈட்டி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இறைச்சி’: வெறியேற்றும் அர்ஷத் நதீமின் கதை!

Aug 09, 2024, 11:32 PM IST

Arshad Nadeem:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு என்னும் ஒரு அறியப்படாத கிராமத்தைச் சேர்ந்தவர் தான், ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம். தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தானின் முதல் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். அவரின் கதையை அறிவோம்.

  • Arshad Nadeem:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு என்னும் ஒரு அறியப்படாத கிராமத்தைச் சேர்ந்தவர் தான், ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம். தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தானின் முதல் தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். அவரின் கதையை அறிவோம்.
யூடியூப்பில் ரோஹா நதீமின் 'பியாண்ட் தி த்ரோ' நிகழ்ச்சியில் பேசிய அர்ஷத் நதீம், "ஒரு காலத்தில் நான் கிராமத்து தச்சரிடம் கத்தரிக்கோலை எடுத்துச்சென்று, அதை ஈட்டி போல மாற்றச்சொல்வேன். அதை வைத்து தான் களத்தில் இறங்கி பயிற்சி செய்வேன். எனது பயிற்சியாளர் சாகி சாஹிப், ஈட்டி எறிய எனது முழங்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மணிக்கணக்கில் எனக்குக் கற்பிப்பார்’’என்றார்.
(1 / 5)

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையின்படி, அர்ஷத் நதீமின் தந்தை கூறுகையில், "நான் சிறுவயதிலிருந்தே பெரிய வீடு கட்ட கொத்தனாராக வேலைசெய்தேன். சில சமயம், என்னுடன் வேலைக்கு வருவார், நதீம். 2010ஆம் ஆண்டில் பேட்டையும் பந்தையும் கொண்டு வரச் சொன்னார் நதீம். ஆரம்பத்தில், அவர் கிராம மைதானத்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.நதீமை கிரிக்கெட்டில் இருந்து இரண்டு சகோதரர்கள் தான் தடகளத்திற்கு அழைத்து வந்தனர்’’ என்றார். (படம்: AFP)
(2 / 5)

பின்னர், அர்ஷத் நதீம், ஈட்டி எறிய ஆரம்பித்தார். முதலில் கிராமப் பள்ளியில் ஆரம்பத்தில் வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் விளையாடத் தொடங்கிய நதீம், இறுதியில், ஈட்டி எறிதலைத் தனக்கானதாகத் தேர்ந்தெடுத்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானின் முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதலுக்காக அர்ஷத் நதீம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
(3 / 5)

அர்ஷத் நதீம் சிறுவயதிலேயே வறுமையில் வளர்ந்தார். அல் ஜசீரா செய்தி முகமையின் அறிக்கையின்படி, அர்ஷத் நதீமின் தாத்தா ஷாஹித் அசீம் தன் குடும்பம் பற்றிய பல உண்மைகளைக் கூறியுள்ளார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இறைச்சி சாப்பிடுவதாக நதீமின் தாத்தா கூறினார். அதுவும், காலேபத்ரா விழா அன்றுதான், தனக்கு பிடித்த அந்த அசைவ உணவை உண்ணும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் அவரது குடும்பம் எத்தகைய கஷ்டப்பட்ட சூழலில் இருந்து வருகிறது என்பது புலனாகிறது.
(4 / 5)
அர்ஷத் நதீம் சிறுவயதிலேயே வறுமையில் வளர்ந்தார். அல் ஜசீரா செய்தி முகமையின் அறிக்கையின்படி, அர்ஷத் நதீமின் தாத்தா ஷாஹித் அசீம் தன் குடும்பம் பற்றிய பல உண்மைகளைக் கூறியுள்ளார். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இறைச்சி சாப்பிடுவதாக நதீமின் தாத்தா கூறினார். அதுவும், காலேபத்ரா விழா அன்றுதான், தனக்கு பிடித்த அந்த அசைவ உணவை உண்ணும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார். இதன்மூலம் அவரது குடும்பம் எத்தகைய கஷ்டப்பட்ட சூழலில் இருந்து வருகிறது என்பது புலனாகிறது.(. (படம்: AFP))
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தியின்படி, நதீமின் பயிற்சியாளர் சையத் ஹுசைன் புகாரி, இவ்வளவு இளம் வயதில்(27 வயது) தனது முழங்கைகளால் அர்ஷத் உருவாக்கிய வெற்றியைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகக் கூறினார். அவர் ஒரு கட்டுப்பாடற்ற திறமைசாலி. அர்ஷத் நதீம், வெற்றியின்போது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ஒரு கிராமத்து சிறுவனைப் போல இருந்தார். அவர் எதைக் கற்பித்தாலும், மிக விரைவாக கற்றுக்கொண்டார் என பேட்டியளித்துள்ளார், 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை