தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மதுரையில் மிஸ்செய்யாமல் பார்க்கவேண்டிய 5 இடங்கள்.. படங்கள் வழியே தகவல்கள் உள்ளே அறிந்துகொள்வோமோ?

மதுரையில் மிஸ்செய்யாமல் பார்க்கவேண்டிய 5 இடங்கள்.. படங்கள் வழியே தகவல்கள் உள்ளே அறிந்துகொள்வோமோ?

Dec 17, 2024, 03:56 PM IST

மதுரையில் மிஸ்செய்யாமல் பார்க்கவேண்டிய 5 இடங்கள் குறித்துப் பார்ப்போம். 

  • மதுரையில் மிஸ்செய்யாமல் பார்க்கவேண்டிய 5 இடங்கள் குறித்துப் பார்ப்போம். 
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மதுரைக்கு உண்டு. தமிழ் நிலப்பரப்பை ஆண்ட பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக மதுரை விளங்கியது. கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் பழமையும் வனப்பும் புராதனமும் பாரம்பரியமும் மிக்க நகரம் ஆகும். வைகை நதி பாயும் இந்த மதுரையில் தவறவிடாமல் பார்க்க வேண்டிய 5 இடங்களைப் பற்றிப் பார்க்கலாம். 
(1 / 6)

பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகர பாண்டியனால், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் கட்டப்பட்டது. அதன்பின், முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், விஸ்வநாத நாயக்கர் ஆகிய மன்னர்களால் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. இக்கோயிலில் இருக்கும் சுவர்களும், சுவர் ஓவியங்களும் இன்னும் கட்டுமானக்கலைக்கு சிறந்த முன் உதாரணம் ஆகும். 
(2 / 6)

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரால் 1623 முதல் 1659 வரை கட்டப்பட்ட அரண்மனை இதுவாகும். இது இந்தோ செராசெனிக் கட்டடக்கலைக்கு  சிறந்த உதாரணமாகும். இந்த கட்டுமானத்தில் நிறைய ஐரோப்பிய கட்டடக் கலைஞர்களின் உள்ளீடுகளை அதிகம் மன்னர் திருமலை நாயக்கர் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் இந்த மகால் திறந்திருக்கும். இங்கு மாலை நேரத்தில் ஒலி-ஒளி நிகழ்ச்சி 8 மணி முதல் 8:50 மணி வரை நடத்தப்படுகிறது. 
(3 / 6)

மதுரையில் இருந்து மேற்குத் திசையில் 10 கி.மீ தொலைவில் இருக்கும் கீழக்குயில்குடி கிராமத்தில் இருக்கும் பாறை மலைகள் தான், சமணர் மலை ஆகும். இது தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக குறிக்கப்படுகிறது.
(4 / 6)

வைகை ஆற்றின் தென்கரையில் இருக்கும் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 2018ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து கிடைத்த பொருட்கள், கொந்தகை என்னுமிடத்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை கீழடி அருங்காட்சிகம் என்பர். குழந்தைகளுடன் சென்று பார்க்க ஒரு சிறந்த இடம் ஆகும். 
(5 / 6)

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயிருக்கும் சிறுமலை அடிவாரத்தில் குட்லாடம்பட்டி அருவி இருக்கிறது. இங்கு மழைக்காலங்களில் அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அடிக்கும் வெயிலை சில் செய்ய இயற்கை தந்த வனப்பு, இந்த அருவி. மதுரையில் இருந்து 37 கி.மீ பயணித்தால், இந்த அருவியை அடையலாம். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை