தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நல்ல நிகழ்ச்சிகள் மூலம் நமது வாழ்க்கையை ரேடியோ பிரகாசமாக்கட்டும் – மோடி டிவீட்

நல்ல நிகழ்ச்சிகள் மூலம் நமது வாழ்க்கையை ரேடியோ பிரகாசமாக்கட்டும் – மோடி டிவீட்

Priyadarshini R HT Tamil

Feb 13, 2023, 10:25 AM IST

google News
PM Modi Tweet on World Radio Day: தனது நல்ல நிகழ்ச்சிகள் மூலம் நமது வாழ்க்கையை ரேடியோ பிரகாசமாக்கட்டும் என்று உலக ரேடியோ தினத்தில் இந்திய பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். இந்தாண்டு ரேடியோ தினத்தின் மையக்கரு ரேடியோ மற்றும் அமைதி‘ என்பதாகும்.

தனது நல்ல நிகழ்ச்சிகள் மூலம் நமது வாழ்க்கையை ரேடியோ பிரகாசமாக்கட்டும் என்று உலக ரேடியோ தினத்தில் இந்திய பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார். இந்தாண்டு ரேடியோ தினத்தின் மையக்கரு ரேடியோ மற்றும் அமைதி‘ என்பதாகும். 

மேலும் பிரதமர் மோடி தனது 98வது மன்கிபாத் நிகழ்ச்சிக்கு தகவல்களை வழங்குமாறும் மக்களிம் கேட்டுள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோ கேட்பவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற பிராட்காஸ்டிங் மீடியமில் உள்ளவர்களை, உலக ரேடியோ தினத்தில் பாராட்டியுள்ளார். 

யுனெஸ்கோ, 2011ம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் உலக ரேடியோ தினத்தை கொண்டாடவேண்டும் என்று அறிவித்தது. இந்தாண்டு அதற்கான மையக்கருவாக ‘ரேடியோ மற்றும் அமைதி‘ உள்ளது. 

இன்று உலக ரேடியோ தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்துள்ள டிவீட்டில், உலக ரேடியோ தினத்தில், ரேடியோ கேட்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதில் பணியாற்றும் ரேடியோ ஜாக்கிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராட்காஸ்ட்டிங் சூழலில் உள்ள அனைவருக்கும் இந்த நன்னாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிகழ்ச்சிகளின் மூலம் ரேடியோ நமது வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும் மற்றும் மனிதர்களின் கற்பனை திறனை காட்டுவதற்கு ஒரு நல்ல இடமாகவும் இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி தனது 98வது மன்கிபாத் நிகழ்ச்சிக்கு தகவல்களை வழங்குமாறும் மக்களிம் கேட்டுள்ளார். பிப்ரவரி 26ம் தேதி அது நடைபெறவுள்ளது. அதற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பதவியேற்ற நாள் முதல் ‘மன் கி பாத்‘ என்ற நிகழ்ச்சி ரேடியோவில் மாதமொரு முறை ஒலிபரப்பப்பட்டு வருகிறது. அதற்கு தமிழில் மனதின் குரல் என்று அர்த்தம். 

இதில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 98வது நிகழ்ச்சியை அடுத்து விரைவில் தனது 100வது நாள் மன்கிபாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சியை கோலாகலமாக வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை