தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  75th Independence Day: இந்தியாவுக்கு விண்வெளியிலிருந்து வாழ்த்து!

75th Independence day: இந்தியாவுக்கு விண்வெளியிலிருந்து வாழ்த்து!

Aug 15, 2022, 11:03 AM IST

google News
இந்தியாவுக்குச் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து மற்றும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவுக்குச் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுதந்திர தின வாழ்த்து செய்தி வந்துள்ளது.

விண்வெளியிலிருந்து இத்தாலி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சமந்தா கிரிஸ்டோஃப்ரோட்டி வாழ்த்துக் கூறி வீடியோ கிளிப் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர், " இந்திய நாடு தங்களது 75வது சுதந்திர தினத்தை தற்போது கொண்டாடி வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு அமெரிக்க விண்வெளி மையான நாசா, இத்தாலி விண்வெளி முகமை மற்றும் சர்வதேச பல கூட்டாளிகளின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது வாழ்த்துக்களைச் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பகிர்ந்துள்ளேன்.

இஸ்ரோவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பல ஆண்டுகளாகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதேபோல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக இஸ்ரோ தற்போது ஆயத்தமாகி வருகிறது. அந்த சூழலில் எனது வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்" என்ன தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நேரடியாக விண்வெளியிலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி என்பதால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ மிக வேகமாகப் பரவி வருகிறது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி