தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election: ’பிரதமர் மோடி வந்தாலும் எதுவும் நடக்காது என்று அப்பவே சொன்னோம்’ பாஜகவினரை கலாய்த்துவிட்ட சித்தராமையா

Karnataka Election: ’பிரதமர் மோடி வந்தாலும் எதுவும் நடக்காது என்று அப்பவே சொன்னோம்’ பாஜகவினரை கலாய்த்துவிட்ட சித்தராமையா

Kathiravan V HT Tamil

May 13, 2023, 12:19 PM IST

”காங்கிரஸ் தனது சொந்த பலத்தில் 120 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடிக்கும்” (PTI)
”காங்கிரஸ் தனது சொந்த பலத்தில் 120 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடிக்கும்”

”காங்கிரஸ் தனது சொந்த பலத்தில் 120 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடிக்கும்”

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டப் பேரவையில் 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று காங்கிரஸ் தனித்து ஆட்சிக்கு வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியால் மாநில வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

கர்நாடக தேர்தலில் 122 இடஙகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கும் நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வருகைகள் கர்நாடக வாக்காளர்கள் மத்திய எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி 120 இடங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும், இன்னும் ஆரம்ப கட்டம் தான், இன்னும் பல சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைய வேண்டும். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தில் 120 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற அவர், நரேந்திர மோடியோ, அமித் ஷாவோ, ஜே.பி. நட்டாவோ மாநிலத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்; ஆனால் கர்நாடக வாக்காளர்கள் மத்தியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஏனெனில் பாஜக அரசின் ஊழல், தவறான நிர்வாகத்தால் அலுத்துவிட்டனர். எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யாததால், மக்கள் மாற்றத்தை விரும்பினர், அதற்கேற்ப தீர்ப்பை வழங்கியுள்ளன என கூறினார்.

 

அடுத்த செய்தி