தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Wayanad Landslides: கேரளாவின் வயநாடு பகுதியில் பயங்கர நிலச்சரிவு - 7 பலியான சோகம்.. 30 பேர் மீட்கப்பட்டதாக தகவல்!

Wayanad landslides: கேரளாவின் வயநாடு பகுதியில் பயங்கர நிலச்சரிவு - 7 பலியான சோகம்.. 30 பேர் மீட்கப்பட்டதாக தகவல்!

Jul 30, 2024, 09:49 AM IST

google News
Wayanad landslides: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அம் மாநில முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Wayanad landslides: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அம் மாநில முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Wayanad landslides: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அம் மாநில முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருக்க கூடும் என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவில்  இதுவரை  7 பேல் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30, செவ்வாய்கிழமை அதிகாலை மேப்பாடி அருகே உள்ள பல்வேறு மலைப்பகுதிகளில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சசரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மலையில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்தவுடன் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ( KSDMA) தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.மேலும் வயநாடு செல்லும் வழியில் கூடுதல் என்டிஆர்எஃப் குழுவும் உள்ளது.

KSDMA இன் முகநூல் பதிவின்படி, கண்ணூர் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவ வயநாட்டிற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தொண்டர்நாடு கிராமத்தில் வசிக்கும் நேபாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக வயநாடு மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலச்சரிவு தொடர்பான மீட்புப் பணிகளுக்குத் தலைமை தாங்குவதற்காக மாநில அமைச்சர்கள் மலைப்பாங்கான மாவட்டத்திற்குச் சென்று நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான பிற பேரிடர்களை அடுத்து, சுகாதாரத் துறை - தேசிய சுகாதார இயக்கம் - கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது என்றும் பினராயி விஜயன் கூறினார்.

அவசர உதவி எண்

அவசர உதவி தேவைப்படுவோர் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய இரண்டு எண்கள் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் சூரல் மாலா பள்ளிக்கு அருகில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டதாக Onmanorama தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்படும் முகாமாக செயல்படும் பள்ளி, அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர், சேறு சூழ்ந்தது. நிலச்சரிவுகளில் குறைந்தது ஐந்து பேர் பலியாகினர்.

சூரல் மாலா நகரில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் சிக்கித் தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்று ஒன்மனோரமா தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி