தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check : உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்தது முஸ்லீம் நபரா? பரவும் வதந்தி.. உண்மையில் நடந்தது என்ன?

Fact Check : உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்தது முஸ்லீம் நபரா? பரவும் வதந்தி.. உண்மையில் நடந்தது என்ன?

Fact Crescendo HT Tamil

Jun 18, 2024, 02:45 PM IST

google News
Fact Check : சுங்கச்சாவடியை இடித்த ஜே.சி.பி. ஓட்டுநரான முகமது சாஜித் அலி கைது என்றுகூறி வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் என செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.
Fact Check : சுங்கச்சாவடியை இடித்த ஜே.சி.பி. ஓட்டுநரான முகமது சாஜித் அலி கைது என்றுகூறி வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் என செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.

Fact Check : சுங்கச்சாவடியை இடித்த ஜே.சி.பி. ஓட்டுநரான முகமது சாஜித் அலி கைது என்றுகூறி வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் என செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.

‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது என்று பரவும் வதந்தி

உண்மை அறிவோம்:

கடந்த ஜூன் 11, 2024 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள Chhajarsi என்ற சுங்கச்சாவடியில் புல்டோசர் ஓட்டுநர் ஒருவரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். ஆனால், ஆத்திரமடைந்த அந்த நபர் புல்டோசர் மூலம் சுங்கச்சாவடியை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியான செய்திகள் அனைத்திலும் இந்த குற்றத்தை செய்த நபரின் பெயர் தீரஜ் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு முஸ்லீம் என்றும், அவரது பெயர் முகமது சாஜித் அலி என்றும் கூறி சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்.

ஏனெனில், இதுபற்றி உத்தரப்பிரதேச மாநில போலீசார் (HAPUR POLICE) ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட குற்றவாளியின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டு, போலீசார் பதிவிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து  (ஜூன் 11) ஹபூர் மாவட்ட காவல்துறையினர் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், “11.06.2024 அன்று, பில்குவா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சஜர்சி சுங்கச்சாவடியில், ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் தனது ஜேசிபி மூலம் சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதை அடுத்து, அதே நபர் கர்முக்தேஷ்வர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1 நான்கு சக்கர வாகனத்தையும் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கைது செய்யப்பட்ட குற்றவாளியின் பெயர் – குன்னூர் மாவட்டம், படவுன், சிகாரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வித்யாராமின் மகன் தீரஜ். ஜேசிபி பதிவு எண். UP-14 KT-4255″ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒரு இந்து என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது. ஆனால், முஸ்லீம் நபர்தான் இவ்வாறு செய்ததாக, வேண்டுமென்றே சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது.

பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் Fact Crescendo-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை