தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Warren Hastings : இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் நினைவு தினம் இன்று!

Warren Hastings : இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் நினைவு தினம் இன்று!

Priyadarshini R HT Tamil

Aug 22, 2023, 06:20 AM IST

google News
Warren Hatings : வாரன் ஹேஸ்டிங்ஸ், 1732ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர். முதல் மற்றும் புகழ்பெற்ற இந்தியாவுக்கான பிரிட்டிஷ் கவர்னர் ஆவார். இவர் 1772 முதல் 1785ம் ஆண்டு வரை இந்திய விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினார். குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் இங்கிலாந்து திரும்பினார்.

தந்தையால் கைவிடப்பட்டு மாமாவால் வளர்க்கப்பட்டவர், லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியில் படித்தவர். தனது மாமாவின் மறைவுக்குப்பின் 17 வயதிலே வங்காளம் வந்து கிழக்கிந்திய கம்பெனிக்காக பணிபுரிந்தார். நிறுவனத்தின் வணிக பிரிவில் முதலில் பணியாற்றினார்.

இவர் காலத்தில்தான் இந்தியாவில் கம்பெனி ஆட்சி காலூன்றியது. பின்னர் இவர் மீது 1787ம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தால் விசாரணை நடத்தப்பட்டு, 1814ம் ஆண்டில் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்தில், ராபர்ட் கிளைவுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டவர்.

இந்தியாவில் இவர் பணியாற்றிய காலத்தில், கடுமையாக உழைத்து, உருது, பாரசீகம் போன்ற மொழிகளை கற்றவர். 1752ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று, ஆங்கிலேயேர்களின் முக்கிய வணிகத் தலமான காசிம் பஜார் பகுதியில் பணியில் இருந்தபோது கிழக்கிந்திய அரசியலை கற்றார்.

1756ம் ஆண்டு ஜீன் மாதத்தில் வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவின் படையால், கிழக்கிந்திய கம்பெனி படைகள் சிறை பிடிக்கப்பட்டு முர்சிதாபாத்தில் அடைக்கப்பட்டனர். 1757ம் ஆண்டில் ராபர்ட் கிளைவ், சென்னையிலிருந்து புறப்பட்டு, வங்காள நவாப் சிராஜ் உத் தௌலாவை பிளாசிப் போரில் வென்று, மீர் ஜாபரை அரியனையில் ஏற்றி, வாரங்ஹேஸ்டிங்ஸை மீட்டார்.

சென்னையை கைப்பற்ற வந்த ஐதர் அலியை எதிர்கொள்ள, வாரன் ஹேஸ்டிங்ஸ் சென்னை வந்தடைந்தார். சென்னை, கொல்கத்தா, பம்பாய் போன்ற முதன்மை மாகாணங்களை தனித்தனி தலைமை ஆளுனர்களால் ஆளப்படும் முறையை நீக்கி, அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும், கிழக்கிந்திய கம்பெனியின் ஒரே தலைமை ஆளுனர் ஆட்சிக்கு வித்திட்டார். மேலும் வாரன் ஹேஸ்டிங்ஸ், கிழக்கிந்திய கம்பெனியின், இந்தியாவின் தலைமை ஆளுனராக, 1773ம் ஆண்டில் கல்கத்தாவில் பதவி ஏற்றுக்கொண்டார்.

கொள்ளை கூட்டத்தவர்களை கட்டுப்படுத்தினார். வாரன் ஹேஸ்டிங்ஸ், வங்காளத்தின் ஆளுனராக இருந்த காலத்தில் 1770ம் ஆண்டு வங்காளத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. பஞ்சத்தில் பத்து மில்லியன் மக்கள் பசிக் கொடுமையாலும், நோயாலும் கொல்லப்பட்டனர்.

பிட்டின் இந்தியா சட்டப்படி மும்பை மற்றும் சென்னை மாகாணங்களின் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்தனர். வங்காள மாகாண ஆளுனராக வாரன்ஹேஸ்டிங்ஸ் 1774ம் ஆண்டு முதல் தலைமை ஆளுனராக பதவி உயர்த்தப்பட்டார். மற்ற மாகாண ஆளுனர்கள், வங்காள மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் துவங்கினார். கல்கத்தா, கம்பெனி அட்சியின் தலைநகராக மாறியது.

பத்தாண்டு பணி நிறைவு செய்த வாரன்ஹேஸ்டிங்ஸ், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனர் பணியை துறந்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி