தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Russia: பின் வாங்கிய வாக்னர் கிளர்ச்சி படை! நிம்மதி பெருமூச்சில் ரஷ்யா!

Russia: பின் வாங்கிய வாக்னர் கிளர்ச்சி படை! நிம்மதி பெருமூச்சில் ரஷ்யா!

Kathiravan V HT Tamil

Jun 26, 2023, 11:01 AM IST

google News
யெவ்ஜெனி ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் அவ்வாறு வெளியேறினால் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (REUTERS)
யெவ்ஜெனி ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் அவ்வாறு வெளியேறினால் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெவ்ஜெனி ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் அவ்வாறு வெளியேறினால் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரேன் போரில் திடீர் திருப்பமாக ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ படை ரஷ்ய நாட்டுக்கு எதிராக திரும்பிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

உக்ரைனில் இருந்து ரஷ்ய எல்லைக்கு நுழைந்த வாக்னர் கூலிப்படையினர் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படைகளை நகர்த்த இருப்பதாக அறிவித்தனர்.

இதுமட்டுமின்றி ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரோஸ்டோவ்-ஆன்-டானுக்குள் புகுந்து அங்குள்ள ரஷியாவின் தெற்கு பிராந்திய ராணுவத் தலைமை அலுவலகத்தையும் வாக்னர் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

’வாக்னர்’ படையின் இந்த செயலை முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் சாடி இருந்தார். “துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்” என்றும் புதின் கூறினார்.

இந்த நிலைய்ல் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிர்கோஜின் உடன் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் காரணமாக வாக்னர் படை பின்வாங்கி உள்ளது.

யெவ்ஜெனி ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் அவ்வாறு வெளியேறினால் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெருலஸ் நாட்டிற்கு யெவ்ஜெனி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் வெடிக்க இருந்த உள்நாட்டு போர் அச்சம் முடிவுக்கு வந்துள்ளது.

யார் இந்த வாக்னர் படை?

தனியார் ராணுவ நிறுவனமான வாக்னர் படையில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உள்ளனர். உக்ரேன் - ரஷ்யா போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நீண்டகாலமாக களத்தில் உக்ரைன் மீது வாக்னர் படை தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரேன் நாட்டில் உள்ள ’பாக்முத்’ என்ற நகரை கைப்பற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற போரில் வாக்னர் படையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

தனியார் ராணுவமான வாக்னர் படையை ரஷ்ய அரசு கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரகசிய குழுவாக செயல்பட்டு வந்த வாக்னர் படை பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வந்தது.

‘வெறும் 5 ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்த வாக்னர் படையில் தற்போது சுமார் 50 ஆயிரம் வீரர்கள் வரை உள்ளதாக’ பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை