Hindu: ’நான் ஒரு இந்து!’ அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி பேச்சு!
Jan 06, 2024, 04:26 PM IST
”நான் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தேன், என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தது குடும்பம்தான். நீங்கள் கடவுளுக்கு முன்பாக திருமணம் செய்து, கடவுளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சத்தியம் செய்கிறீர்கள்”
இந்து மத நம்பிக்கையே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தூண்டியதாக குடியரசுத் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெய்லி சிக்னல் பிளாட்ஃபார்ம் ஏற்பாடு செய்த 'தி ஃபேமிலி லீடர்' மன்றத்தில் தனது நம்பிக்கையைப் பற்றித் திறந்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விக்வேக் ராமசுவாமி, இந்து மதம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் போதனைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டு பேசினார்.
அப்போது “நம்பிக்கையே எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது. எனது நம்பிக்கைதான் இந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு என்னை இட்டுச் சென்றது. நான் ஒரு இந்து. உண்மையான கடவுள் ஒருவர் இருப்பதாக நான் நம்புகிறேன். கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக இங்கு வைத்துள்ளார் என்று நான் நம்புகிறேன். அந்த நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய கடமை, தார்மீகக் கடமை நமக்கு இருக்கிறது என்பதை என் நம்பிக்கை நமக்குக் கற்பிக்கிறது. அவை வெவ்வேறு வழிகளில் நம் மூலம் செயல்படும் கடவுளின் கருவிகள், ஆனால் கடவுள் நம் ஒவ்வொருவரிலும் வசிப்பதால் நாம் இன்னும் சமமாக இருக்கிறோம். அதுவே என் நம்பிக்கையின் அடிப்படை என விவேக் ராமசாமி பேசினார்.
விவேக் ராமசாமி தனது வளர்ப்பை பற்றியும், தனது குடும்பம், திருமணம் மற்றும் பெற்றோருக்கு மரியாதை ஆகியவற்றைச் சுற்றியுள்ள மதிப்புகள் குறித்து கூறினார்.
"நான் பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தேன், என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தது குடும்பம்தான். நீங்கள் கடவுளுக்கு முன்பாக திருமணம் செய்து, கடவுளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சத்தியம் செய்கிறீர்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.
இந்து மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை குறித்து பேசிய இவேக் ராமசாமி, "நான் கிறிஸ்டியன் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன், நாங்கள் என்ன கற்றுக்கொள்கிறோம்? நாங்கள் 10 கட்டளைகளைக் கற்றுக்கொண்டோம், நாங்கள் பைபிள் படித்தோம், வேத வகுப்புகள், கடவுள் உண்மையானவர், உண்மையான கடவுள் ஒருவர் இருக்கிறார், உங்கள் பெற்றோரை மதியுங்கள். பொய் சொல்லாதீர்கள், திருடாதீர்கள், விபச்சாரம் செய்யாதீர்கள் உள்ளிட்ட விழுமியங்களை கற்றுக் கொண்டேன். இவை கிறிஸ்தவர்களுக்கோ, இந்துக்களுக்கோ சொந்தமானவை அல்ல, உண்மையில் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என கூறினார்.
அமெரிக்காவில் நம்பிக்கை, குடும்பம், கடின உழைப்பு, தேசபக்தி மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதே ஜனாதிபதியாக தனது பொறுப்பாகும் என்றும் ராமசாமி கூறினார்.
யார் இந்த விவேக் ராமாசாமி?
38 வயதான மனநல மருத்துவரான விவேக் ராமசுவாமி அமெரிக்காவின் தென்மேற்கு ஓஹியோவைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்தார். இவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.
அமெரிக்க ஜானதிபதி தேர்தலுக்கான விவேக் ராமசாமியின் பிரச்சாரம் கவனத்தை ஈர்த்துள்ளது, இருப்பினும் அவர் இன்னும் ஆதரவில் டிரம்ப் மற்றும் புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸை விட பின்தங்கியுள்ளார். அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெற உள்ளது.
டாபிக்ஸ்