Vikram Sarabhai : இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாய் பிறந்த தினம் இன்று!
Aug 12, 2023, 06:20 AM IST
Vikram Sarabhai : விக்ரம் சாராபாய், விக்ரம் அம்பாலால் சாராபாய், 1919ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்தார். இந்திய இயற்பியல் அறிஞர் மற்றும் தொழில் அதிபர். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்தியாவில் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவினார்.
சாராபாய் ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர். குஜராத், அகமதாபாத்தில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். டிரிபோஸ் எனப்படும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இறுதி பட்டத்தை 1940ம் ஆண்டு இயற்கை அறிவியலில் முடித்தார்.
அப்போது இரண்டாம் உலகப்போர் அவரை இந்தியா செல்ல கட்டாயப்படுத்தியது. காஸ்மிக் கதிர்கள் குறித்து அவர் ஆராய்ச்சி செய்தார். சர் சந்திரசேகர வெங்கட ராமன் வழிகாட்டுதலில் பெங்களூரு இந்திய அநிவியல் மையத்தில் தனது ஆராய்ச்சியை செய்தார். 1945ம் ஆண்டு அவர் மீண்டும் கேம்பிரிட்ஜ் சென்று தனது ஆராய்ச்சி படிப்பை தொடங்கினார். காஸ்மிக் ரே இன்வெஸ்டிகேசன்ஸ் இன் ட்ராபிக்கல் லாட்டிட்யூட்ஸ் என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தார். இவர் அகமதாபாத்தில் தனது ஆராய்ச்சி மையத்தை நிறுவினார்.
அறிவியல் ஆராய்ச்சியில் தீவிர பற்றுகொண்டிருந்த அவர், தொழில், வணிகம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். 1947ம் ஆண்டு சாராபாய் அகமதாபாத் ஜவுளித்தொழிலில் ஆராய்ச்சி சங்கத்தை நிறுவி 1956 வரை அதை கவனித்து வந்தார். இந்தியாவில் தொழில்முறை மேலாண்மை கல்வியின் அவசியத்தை உணர்ந்த சாராபாய் 1962ம் ஆண்டு அகமதாபாத்தில் இந்திய மேலாண்மை மையம் அமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.
1962ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்திய தேசிய குழு ஒன்றை அமைத்தார். அது பிற்காலத்தில் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் இஸ்ரோ என்று அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவில் தும்பா இக்வடோரியல் ராக்கெட் ஏவுதளத்தையும் சாராபாய் அமைத்தார். இவர் இஸ்ரோவில் ஒரு ரூபாய் அடையாள சம்பளத்திற்கு பணி செய்தார்.
1966ம் ஆண்டு ஹோமி பாபாவின் மறைவுக்குப் பின்னர், இந்திய அணுசக்தி கமிஷனின் சேர்மனாக பணி அமர்த்தப்பட்டார். இந்தியாவின் அணுசக்தி கழகங்கள் நிறுவுதல் மற்றும் வளர்ச்சியில் சாராபாயின் பணி போற்றத்தக்கது. அணு ஆராய்ச்சியில் தனித்தன்மையான வளர்ச்சிக்கு இவர்தான் பாதையமைத்தார். அது பாதுகாப்பு காரணங்களுக்காக இருந்தது.
ரஷ்யாவில் இருந்து 1975ம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆரியபட்டாவை புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுவினார்.
செயற்கைகோள் தொலைதொடர்பு கருவிகள் மூலம் கல்வியை தொலைதூர கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினார். இந்தியாவில் அணு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறிய அறிவியல் அறிஞர் சாராபாய்க்கு பத்ம பூஷண் மற்றும் பத்ம வீபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 1971ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இறந்தார்.
டாபிக்ஸ்