UPSC CSE 2024: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Mar 06, 2024, 08:45 AM IST
UPSC CSE 2024: சிவில் சர்வீஸ் தேர்வு 2024-க்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களை ஆணையத்தின் இணையதளத்தில் இன்று மாலை 6 மணிக்கு முன்பு சமர்ப்பிக்கலாம்.
UPSC CSE 2024: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு 2024-க்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.06) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களை ஆணையத்தின் இணையதளத்தில் இன்று மாலை 6 மணிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.
UPSC CSE 2024 பதிவு: முக்கிய இணையதளங்கள்:
- upsc.gov.in
- upsconline.nic.in
அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணபிக்க நேற்று (மார்ச்.05) மாலை 6 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்கு விண்ணபிக்க கடைசி நாளான நேற்று தேர்வர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரம் சர்வர் முடங்கியது. இதனால் நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற முடியாமல் போனது. இந்தச் சூழலில் கால அவகாசம் நீட்டிக்க கோரி விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேரத்தை நீட்டித்துள்ளது. இந்தாண்டுக்கான முதல் நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2024 மூலம் சுமார் 1,056 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சிவில் சர்வீஸ் தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டிருக்கும். முதலாவது புறநிலை வகை கேள்விகளின் பூர்வாங்க ஆய்வு. மற்றொன்று முதல்நிலைத் தேர்வு ஆகும் .
இந்திய நிர்வாக சேவை (IAS), போலீஸ் சேவை (IPS) மற்றும் வெளிநாட்டு சேவை (IFS) ஆகியவற்றிற்கு, விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு, நேபாளம், பூட்டான்; திபெத்திய அகதிகள், பாகிஸ்தான், பர்மா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா ஐக்கிய குடியரசு, ஜாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த தகுதித் தேவைகளின் விவரங்கள் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட விரிவான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வயது அடிப்படையில், விண்ணப்பதாரர் ஆகஸ்ட் 1, 2023 அன்று குறைந்தபட்சம் 21 வயது மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9