Mayawati: ‘I.N.D.I.A அணியில் அங்கம் வகிக்காத கட்சி பற்றி கருத்து கூற வேண்டாம்’-சமாஜ்வாதிக்கு மாயாவதி பதிலடி
Dec 21, 2023, 02:59 PM IST
மாயாவதி முன்பு NDA அல்லது I.N.D.I.A அணியுடன் கூட்டணியை நிராகரித்தார், இந்த அணியில் உள்ள கட்சிகளை பெரும்பாலும் "ஏழைகளுக்கு எதிரான, சாதிவெறி, வகுப்புவாத மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவானவை" என்று அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி வியாழனன்று, எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A அணியில் அங்கம் வகிக்காத கட்சிகளைப் பற்றி கருத்து தெரிவிப்பது சரியானது அல்ல, ஏனென்றால் அவர்களுக்கு மற்ற கட்சியின் ஆதரவு எப்போது தேவைப்படலாம் என்று யாருக்கும் தெரியாது என்றார். இது சமாஜ்வாதி கட்சிக்கு கொடுத்த பதிலடியாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
“எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்காத பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குறித்து யாரும் தேவையற்ற கருத்துக்களை கூறுவது பொருத்தமற்றது. அவர்களுக்கு எனது ஆலோசனை என்னவென்றால், அவர்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஏனென்றால் எதிர்காலத்தில் யாருக்கு யார் தேவை என்று நீங்கள் ஒருபோதும் கணிக்க முடியாது, ”என்று மாயாவதி வியாழக்கிழமை ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.
“அது சரியில்லை... இப்படிப்பட்டவர்களும், கருத்துக் கூறும் கட்சிகளும் பிற்காலத்தில் நிறைய சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சமாஜ்வாதி கட்சி இதற்கு ஒரு உதாரணம்,” என்று அவர் மேலும் கூறினார்.
28 எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேர மாயாவதியை அணுகுவதற்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவாக இல்லை என்ற செய்திகளின் பின்னணியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
செப்டம்பரில், மாயாவதி பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA அல்லது எதிர்க்கட்சியின் இந்திய அணியுடன் கூட்டணியை நிராகரித்தார், குழுவில் உள்ள கட்சிகளை பெரும்பாலும் "ஏழைகளுக்கு எதிரான, சாதிவெறி, வகுப்புவாத மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவானவை" என்று அழைத்தார். மாறாக, இரு கூட்டணிகளின் கொள்கைகளுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி போராட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 143 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை வருத்தமான மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று விவரித்தார் மாயாவதி.
“தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இரு அவைகளிலும் சுமார் 150 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்திற்கோ எதிர்க்கட்சிக்கோ நல்ல வேலையோ அல்லது நல்ல சாதனையோ அல்ல என்று எங்கள் கட்சி நம்புகிறது. இதற்கு யார் காரணம் என்றாலும், நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு சோகமான மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், இது மக்களின் நம்பிக்கையையும் உலுக்கும்” என்று மாயாவதி கூறினார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் ராஜ்யசபா தலைவரை மேம்போக்காக மிமிக்ரி செய்யும் வைரலான வீடியோவையும் அவர் குறிப்பிட்டார், அதுவும் பொருத்தமற்றது என்று கூறினார்.
டாபிக்ஸ்