உணவால் வரப்போகும் பேரழிவு - எச்சரிக்கை விடுத்த ஐ.நா !
Jun 25, 2022, 06:16 PM IST
உணவுத் தட்டுப்பாடு காரணமாக இன்னும் சில வருடங்களில் பல நாடுகளுக்கிடையே பொருளாதார சிக்கல்கள் ஏற்படும்.
ஐ.நா சபையின் பொதுச் செயலாளர், உலகம் கடுமையான உணவு தட்டுப்பாட்டால் பேரழிவைச் சந்திக்கும் என அந்தோணியா குத்தேரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ஐநா சபையின் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு அதேபோல் பற்றாக்குறை காரணமாகப் பல மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலைமையானது உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக இன்னும் வலுவடைந்துள்ளது. அமெரிக்கா ஆப்பிரிக்கா ஆசியா போன்ற நாடுகளில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து இன்றியமையாத பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அறுவடை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெரிய நாடுகளிலும் கூட வரும் காலங்களில் பஞ்சம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் உணவு பொருத்தவரை பஞ்சம் மேலும் அதிகரிக்கும்.
உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்தால் பல நாடுகளுக்கு இடையில் பெரும் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக உருவாகும் பொருளாதார சிக்கல்களிலிருந்து எந்த நாடுகளாலும் தப்பிக்க இயலாது. இந்த தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக ஐநா சபையின் அலுவலர்கள் முனைப்போடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
உலகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிதி சார்ந்த பெருக்கத்தைத் தர வேண்டும். விவசாயத்தை முன்னேற்றும் வகையில் சில கடன் நிவாரணங்களை வழங்க வேண்டும். உலகத்தில் இருக்கும் உணவுச் சந்தையில் வளமாக மாற்ற வேண்டும். இதற்குத் தனியார்த் துறைகளும் உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.