தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Odisha Accident : ஒடிசா விபத்து – ஆய்வு செய்த மத்திய அமைச்சர் – தென்கிழக்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரி விசாரிக்க உத்தரவு

Odisha Accident : ஒடிசா விபத்து – ஆய்வு செய்த மத்திய அமைச்சர் – தென்கிழக்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரி விசாரிக்க உத்தரவு

Priyadarshini R HT Tamil

Jun 03, 2023, 08:16 AM IST

ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

இந்நிலையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ரயில் விபத்து நடந்த பாலசோர் பகுதிக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ரயில் விபத்து தொடர்பாக தொலைபேசியில் ஆலோசித்தார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்யும் என ஒடிசா முதல்வரிடம் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

கோரமண்டல ரயில் விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு

ஹவுரா – 033 – 26382217

கரக்பூர் – 8972073925, 9332392339

பாலசோர் – 8249591559, 7978418322

ஷாலிமார் – 9903370746

சென்னை சென்ட்ரல் – 044 – 25330952, 044 – 25330953, 044 – 2535477

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக வடசென்னையில் இன்று நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

ரயில் விபத்து நடந்த ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். விபத்து குறித்து தென்கிழக்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி