Mallikarjun Kharge: ‘உ.பி. மருத்துவமனையில் 14 குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றிய பின் HIV பாதிப்பு’-கார்கே கடும் விமர்சனம்
Oct 25, 2023, 11:40 AM IST
உ.பி.யின் கான்பூரில் உள்ள அரசு நடத்தும் லாலா லஜபதி ராய் (எல்.எல்.ஆர்) மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் மற்றும் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் பி, சி, எச்ஐவி போன்ற தொற்றுகள் இருப்பது உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் மன்னிக்க முடியாத குற்றம் இது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதன்கிழமை விமர்சித்தார்.
"இரட்டை இயந்திரம் கொண்ட அரசாங்கம் நமது சுகாதார அமைப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. உ.பி., கான்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டோரின் ரத்தம் ஏற்பட்டிருக்கிறது, இதன் காரணமாக, இந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி, சி போன்ற கடுமையான நோய்கள் வந்துள்ளன. இந்த தீவிர அலட்சியம் வெட்கக்கேடானது” என்று மல்லிகார்ஜுன கார்கே X இல் எழுதினார்.
தசரா பண்டிகைக்கு மத்தியில் 10 உறுதிமொழிகளை ஏற்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததையும் காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார். "நேற்று பிரதமர் மோடி 10 தீர்மானங்களை எடுப்பது பற்றி எங்களுக்கு பெரிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார், அவர் தனது பாஜக அரசாங்கங்களுக்கு ஒரு துளி கூட பொறுப்பேற்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் இப்போது தலசீமியா நிலைக்கு கூடுதலாக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 14 குழந்தைகளும் 6 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் மையத்தில் இரத்தமேற்றும் 180 தலசீமியா நோயாளிகளில் அடங்குகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில், ஏழு பேருக்கு ஹெபடைடிஸ் பி, ஐந்து பேருக்கு ஹெபடைடிஸ் சி, மற்றும் இரண்டு பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதியாகியுள்ளது.
கான்பூர் நகரம், தேஹாத், ஃபரூகாபாத், அவுரையா, எட்டாவா மற்றும் கன்னோஜ் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் அவர்கள் என்று கூறப்படுகிறது.
டாபிக்ஸ்