தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ukraine War: 365 நாட்கள், 7,000 பேர் பலி... முடிவுக்கு வராத ரஷ்யா-உக்ரைன் போர்!

Ukraine War: 365 நாட்கள், 7,000 பேர் பலி... முடிவுக்கு வராத ரஷ்யா-உக்ரைன் போர்!

Manigandan K T HT Tamil

Feb 24, 2023, 06:10 AM IST

google News
Russia-Ukraine War: இன்றுடன் (24-02-2023) ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.
Russia-Ukraine War: இன்றுடன் (24-02-2023) ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.

Russia-Ukraine War: இன்றுடன் (24-02-2023) ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது.

உக்ரைன் மீது அறிவிக்கப்படாத போரை ரஷ்யா தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இந்தப் போர் காரணமாக உக்ரைன் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் ரஷ்ய தரப்பிலும் கடும் பாதிப்புகள் ஏற்படாமல் இல்லை.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கடந்த ஓராண்டில் சுமார் 7 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சுமார் 80 லட்சம் இடம்பெயர்ந்தனர்.

எப்போது போர் தொடங்கியது?

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அதிகாலை நேரத்தில் உக்ரைன் மீது திடீர் தாக்குதலை நடத்த உத்தரவிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

இதுவொரு ராணுவ நடவடிக்கை என்றே முதலில் அறிவித்தார் புதின்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ குழுவில் சேர உக்ரைன் முயற்சி செய்ததைத் தொடர்ந்தே அந்நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இறங்கியது ரஷ்யா.

சில நாட்களில் முடிவடையும் என்று கருதப்பட்ட இந்தப் போர், பல மாதங்களாக நீடித்தது. விரைவில் ஒரு தீர்வு வரும் என்று இப்போது வரை தெரியவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு முடிகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூற்றுப்படி, கடந்த பிப்ரவரி 13 வரை உக்ரைனில் மொத்தம் 7,199 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் சுமார் 11,800 பேர் என புள்ளிவிவரம் சொல்கிறது.

வானில் இருந்து பனி மழையுடன் குண்டு மழையும் பொழிந்தது. பாதுகாப்பான கூடாரங்களில் உக்ரைன் வாசிகள் தஞ்சம் புகுந்தனர்.

நமது இந்திய மாணவர்கள் கூட குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். பின்னர், இந்திய அரசின் முயற்சியால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாட்டுக்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டனர்.

பிற நாடுகளில் பாதிப்புகள்

உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அது பிற நாடுகளையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும்.

அந்த வகையில் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எரிசக்தி துறையிலும் உணவுத் துறையிலும் பல்வேறு நாடுகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இயற்கை எரிவாயு, கோதுமை, தாவர எண்ணெய், உரங்கள் ஆகியவற்றை பெருமளவு ரஷ்யா தான் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

உக்ரைன் மீது அறிவிக்கப்படாத திடீர் போர் தொடுத்ததால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தன.

இதனால், பல நாடுகளுக்கு இதுபோன்றவற்றை ஏற்றுமதி செய்யாமல் ரஷ்யாவும் பதிலடி கொடுத்தது. இதனால்ல, இந்தப் பொருட்களின் விலை பல்வேறு நாடுகளில் உச்சத்தை தொட்டது.

இதனால், பல்வேறு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்தது.

எப்போது முடிவுக்கு வரும் போர்?

புதின் மனசு வைத்தால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைனுக்கு பலமாக அமெரிக்கா

உக்ரைனுக்கு பக்கபலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் கூட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டிரம்ப அந்நாட்டுக்கே சென்று நேரில் சென்று சந்தித்தார்.

அணு ஆயுத கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக தங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் ரஷ்ய அதிபர் புதினின் முடிவு, மிகப் பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் புதின் அண்மையில் எச்சரித்திருந்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை