Russia Ukraine war: ரஷ்யாவை இணைக்கும் முக்கிய பாலத்தைத் தகர்த்த உக்ரைன்!
Oct 09, 2022, 08:10 PM IST
ரஷ்யா உடன் இணைக்கும் கிரீமிய தீபகற்பத்தில் உள்ள முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த எட்டு மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் நான்கு நகரங்களை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் முக்கிய நகரமான கிரீமிய கீவில் நேற்று சரமாரியாகக் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பல்வேறு மருத்துவ கட்டடங்கள், மனித கட்டடங்கள் பெரும் சேதமாகின.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா உடன் இணைக்கும் முக்கிய பாலத்தை உக்ரைன் தகர்த்துள்ளது. தற்போது தற்காலிகமாக அந்த பாலத்தில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலத்தின் ஒரு பகுதி மட்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
உக்ரைனின் கிரிமீயா தீபகற்பத்தைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. பின்னர் விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் ரஷ்யாவையும் தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 19 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பாலத்தில் ரயில்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ரஷ்ய நாட்டின் முக்கிய நிலப்பரப்புடன் தீபகற்பத்தை இணைக்கிறது.
டாபிக்ஸ்