தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala: தீவிரமடையும் எலி, டெங்கு காய்ச்சல் பரவல் - 2 சிறுவர்கள் பலி

Kerala: தீவிரமடையும் எலி, டெங்கு காய்ச்சல் பரவல் - 2 சிறுவர்கள் பலி

Jun 24, 2023, 08:51 AM IST

google News
கேரளாவில் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 13 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்று பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு தீவிர நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது. (AFP)
கேரளாவில் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 13 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்று பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு தீவிர நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது.

கேரளாவில் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 13 வயது சிறுவன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்று பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு தீவிர நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே பருவ மழை நோய் பாதிப்புகள் அங்கு தீவிரமடைந்துள்ளன. டெங்கு, எலி காய்ச்சல் பரவல் அங்கு அதிகரித்துள்ள நிலையில் ஜூன் மாதத்தில் தற்போது வரை 38 பேர் நோய் பாதிப்பினால் பலியாகியுள்ளனர்.

திருச்சூர் பகுதியை சேர்ந்த தனீஷ்க் என்ற பள்ளி மாணவன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், திருவனந்தபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விஜயன் என்பவரும் உயிரிழந்தார்.

இந்த உயிரழிப்புகளில் 22 பேர் டெங்கு மற்றும் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

நோய் பரவலை தடுப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நோய் கண்காணிப்பு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி