தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? 3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை!

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? 3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை!

Karthikeyan S HT Tamil

Mar 02, 2023, 08:07 AM IST

google News
Assembly Election 2023 Results: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்றத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (மாா்ச் 2) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Assembly Election 2023 Results: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்றத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (மாா்ச் 2) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Assembly Election 2023 Results: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்றத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (மாா்ச் 2) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கபோவது யார் என்பது மாலைக்குள் தெரியவரும்.

திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 16ந் தேதி ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோன்று 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் கடந்த மாதம் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் தலா ஒரு தொகுதி தவிா்த்து 59 இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு நடந்தது.

மேகாலயத்தில் சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் மறைவால், அந்தத் தொகுதிக்கு தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. நாகாலாந்தில் அகுலுடோ தொகுதியில் தற்போதைய பாஜக எம்எல்ஏ போட்டியின்றி வெற்றி பெற்றதால், மீதமுள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.இந்நிலையில் 3 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

திரிபுராவில் முதல்வர் மாணிக் சகா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என தெரிவித்துள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை. ஆனால், ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், 3 மாநில தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கபோவது யார்? என்பது மாலைக்குள் தெரியவரும்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி