World Storytelling Day 2023: உலக கதை சொல்லல் தினம் இன்று!
Mar 20, 2023, 06:20 AM IST
அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன.
கதை உரைக்கப் பெருகும் என்பதே உண்மை நாம் ஒரு கதையை சொல்லசொல்ல அது அடுத்த அடுத்த பரிணாமத்தில் பெருகிக்கொண்டே இருக்கும்.
கதைகள் என்பது வெறும் பொழுது போக்கிற்காக சொல்வது மட்டும் அல்ல. கதைகள் நாள்தோறும் மனிதர்களை பண்படுத்துவது. மெருகேற்றுவது.
கதைகள் வாழ்க்கைக்கு அவசியமா
இன்றைய அவரச உலகில் பெற்றோரிடம் ஆசையாய் பேச வரும் குழந்தைகளுக்கு நம்மால் இரண்டு நிமிடத்திற்கு மேல் அவர்கள் வார்த்தையை கேட்க கூட நேரம் இல்லை. முதலில் நம் எதிர்வினை என்பது கதையடிக்காத என்பதே. ஆனால் உண்மையில் அதைச் சொல்லலாமா என்றால் உளவியல் நிபுணர்கள் கூடாது என்றே எச்சரிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் தினமும் அவர்களிடம் கதைபேசி, கதை சொல்லச் சொல்கிறார். நாள்தோறும் இரவு படுக்கும்போது குழந்தைகளிடம் நாம் கதை சொல்ல வேண்டும். கதைகள் என்பது குழந்தை வளர்ப்பில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. நாம் சொல்லும் கதைகள் அவர்களின் குணங்களை உருவாக்குவதிலும், அவர்களின் நற்பண்புகளை வளர்ப்பதிலும், அவர்களின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதிலும், கற்பனை திறனை தூண்டுவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
சரி எதுவெல்லாம் கதை
கதை என்பதற்கு கால் இல்லை என்பதே உண்மை. கதை சொல்வதற்கோ, கேட்பதற்கோ, எழுதுவதற்கோ எந்த வரையறையும் உருவாக்கப் பட வில்லை. நாம் சொல்லும் அனைத்தும் கதைகள்தான். கதைகள் வழியாக ஒரு மனிதன் தன் வாழ்வின் உள்ள மொத்த அறிவையும் தன் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறான். கதைகள் நம்மை சுற்றி மரங்கள் செடி கொடிகளின் உயிர்ப்பை, விலங்குகளின் குணாதிசயங்களை, மனிதர்களின் பாடுகளை என அனைத்தையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது. காலப்போக்கில் கதைகளின் வழி வாழ்வின் நெறிமுறைகளையும் நாம் நடத்த தொடங்குகிறோம்.
தமிழகத்தின் ஆதி கதைகள்
தமிழகத்தில் இன்றும் காக்கா கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற எழுதப்படாத கதைகள் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அது ஒருவகையில் கதையல்ல பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் கப்பல் பயணத்தின் போது திசையை கண்டறிய காக்கையை பயன்படுத்தி உள்ளனர். அந்த கதை தலை முறை தலை முறையாக இன்றும் கிராமத்து திண்ணையில் இருக்கும் ஏதோ ஒரு கிழவியால் சொல்லப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. அதேபோல் கிடைப்பதற்கு அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் உலகம் முழுவதும் இந்த கதை சொல்லலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் 1991ல் சுவீடன் நாட்டில் இலக்கிய அன்பர்களால் “அனைத்துக் கதை சொல்லிகள் நாள்” என்று தொடங்கப்பட்டது. 1997ல் ஆஸ்திரேலியாவில் ஐந்து வார கதைக் கொண்டாட்டம் மேற்கொள்ளப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்கெனவே தேசிய கதை சொல்லிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 2002ல் ஸ்காண்டிநேவியா இலக்கிய ஈடுபாட்டாளர்கள் ‘ராட்டாடோஸ்க்’ என்ற பெயரில், கதை சொல்வதற்கென்றே ஒரு வலைத்தளத்தைத் தொடங்கினார்கள். இப்படி படிப்படியாக எடுக்கப்பட்ட முயற்சி ஒரு கட்டத்தில் மார்ச் 20 ம் தேதி உலக கதை செல்லல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடுத்த தலையை அறத்தின் பக்கம் நின்று வாழ வைக்கும் கதையை நாம் ஒவ்வொருவரும் சொல்ல முயல்வோம்
டாபிக்ஸ்