தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Tirupati Opens Darshan Slots For October

திருப்பதியில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியீடு

Karthikeyan S HT Tamil

Aug 18, 2022, 10:00 AM IST

பிரமோற்ச நாட்களில் 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமோற்ச நாட்களில் 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமோற்ச நாட்களில் 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Press Freedom Day 2024: பத்திரிகை சுதந்திர தின வரலாறு, முக்கியத்துவம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

Prajwal Revanna Case: தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மேலும் சிக்கல்..பிடியை இறுக்கும் கர்நாடக போலீஸ்!

Prajwal Revanna case: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

Jain monks: ஜெயின் துறவியாக மாறிய பெங்களூரு தொழிலதிபரின் மனைவி, 11 வயது மகன்!-உருக்கமான வீடியோ

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வரும் அக்டோபர் மாதத்துக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டும் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவது வழக்கம். எனவே பிரமோற்ச நாட்களில் இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

பிரமோற்ச நாட்களில் 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமோற்ச நாட்களை தவிர்த்து மற்ற நாட்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்