Nepal: "நேபாளம், சீனா இடையே சிக்கித் தவிக்கும் திபெத்திய அகதிகள்"
Jan 29, 2023, 11:11 AM IST
நேபாளத்தில் திபெத்தியர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் திபெத்தியர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. இது 2008 வரை ஆண்டுக்கு சராசரியாக 2,000 ஆக இருந்தது. அதன் பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 200 ஆகக் குறைந்துள்ளது என்று ரிப்போர்ட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும், அதன் காரணமாக நேபாளத்தில் குடியேற திபெத்தியர்கள் தயங்குகிறார்கள் என்றும் EPardafas அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
நேபாளத்தில் உள்ள திபெத்திய அகதிகள் சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை எல்லையை கடப்பதைத் தடுப்பதில் இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. நேபாளத்தில் 4,000 முதல் 9,000 திபெத்திய அகதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சரியான ஆவணங்கள் இல்லாததால் திபெத்தியர்கள் தொழில்முறை வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது சுதந்திரமாக பயணம் செய்யவோ முடியாது. இது ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய மக்களை மேலும் சுரண்டலுக்கு ஆளாக்குகிறது.
திபெத்தியர்களின் இருப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே சீனா விரும்புகிறது.
இந்தியாவுக்கு பிறகு அதிக திபெத்திய அகதிகளுக்கு நேபாளம் தஞ்சம் கொடுத்து வருகிறது. அதேநேரம், நேபாளத்துடன் சீனா அதிக நெருக்கம் காட்டி வருகிறது.
அமிஷ் ராஜ் முல்மியின் சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஆல் ரோட்ஸ் லீட் நார்த்' என்ற புத்தகத்தில், 2002 ஆம் ஆண்டிலேயே, திபெத்தியர்கள் தொடர்பான சீன அழுத்தத்தை நேபாளம் எதிர்கொள்ளத் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். முதல் முறையாக தலாய் லாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நேபாளம் ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.
திபெத்தில் கோவிட் பெருந்தொற்று பரவல் ஆகஸ்ட் 7, 2022 அன்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்