தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Three Indian Die: உறைந்த ஏரியில் விழுந்து 3 இந்தியர்கள் பலி: தொடரும் சோகம்!

Three Indian Die: உறைந்த ஏரியில் விழுந்து 3 இந்தியர்கள் பலி: தொடரும் சோகம்!

Dec 28, 2022, 10:28 AM IST

google News
Three Indian Americans die after falling in frozen lake: அமெரிக்காவில் அரிசோனாவில் உறைந்த ஏரியில் விழுந்து மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர். (AP)
Three Indian Americans die after falling in frozen lake: அமெரிக்காவில் அரிசோனாவில் உறைந்த ஏரியில் விழுந்து மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர்.

Three Indian Americans die after falling in frozen lake: அமெரிக்காவில் அரிசோனாவில் உறைந்த ஏரியில் விழுந்து மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உறைந்த ஏரியில் நடந்து சென்றபோது பனிப்பாறையில் விழுந்ததில் ஒரு பெண் உட்பட மூன்று இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் டிசம்பர் 26ஆம் தேதி மாலை 3.35 மணியளவில் நடந்தது. அரிசோனாவின் கோகோனினோ கவுண்டியில் உள்ள வூட்ஸ் கேன்யன் ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

"காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்கள் 49 வயதான நாராயண முத்தனா மற்றும் 47 வயதான கோகுல் மெடிசெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றொரு பெண்ணான ஹரிதா முத்தனா (வயது தெரியவில்லை) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்த மூவரும் அரிசோனாவில் உள்ள சாண்ட்லரில் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்," என்று, கோகோனினோ கவுண்டி ஷெரிப் அலுவலகம் (CCSO) செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விரைவில் ஹரிதாவை தண்ணீரில் இருந்து இழுக்க முடிந்ததாகவும், உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் ஆனால் பலனளிக்காததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் உறைந்த ஏரியில் போட்டோ எடுத்து மகிழும் மக்கள்

பின்னர் ஏரியில் விழுந்த நாராயணா மற்றும் மெடிசெட்டி ஆகியோரைத் தேடத் தொடங்கினர். செவ்வாய்கிழமை மதியம் இருவரும் இறந்து கிடந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது. மூன்று உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

CCSO உடன் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உறைந்த ஏரியில் நடந்து சென்று பனிக்கட்டி வழியாக விழுந்ததை அடுத்து, அப்பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதிநிதிகள் ஏரிக்கு அழைக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணி நடந்ததாக,’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடஅமெரிக்காவை தாக்கிய வரும் இந்த குளிர்கால பனியால், ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களும் கனேடியர்களும் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

கியூபெக்கிலிருந்து டெக்சாஸ் வரை 3,200 கி.மீட்டருக்கு மேல் பரவியுள்ள புயலால் கிட்டத்தட்ட 250 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அப்பகுதியில் மட்டுமு் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் பனி காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 யை தாண்டியதாக கூறப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி