Crime: மழலையர் பள்ளியில் கத்திக்குத்து - 3 குழந்தைகள் பலி
Jul 11, 2023, 10:12 PM IST
சீனாவில் பள்ளியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் குழந்தைகள் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நிகழ்ந்த திடீர் கத்திக்குத்து சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மூன்று பேர் குழந்தைகள் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பலியானவர்களின் மீதமுள்ளவர்களில் ஒருவர் ஆசிரியர் என்றும் இரண்டு பேர் பெற்றோர்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வூ என்ற குடும்பப் பெயரைக் கொண்ட 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 7.40 மணி அளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் இறக்கி விட்டுச் செல்லும் பொழுது நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம். மேலும் பள்ளியில் கொலை செய்யப்பட்ட நபர்களின் ஒருவரின் கார் இப்போது கத்திக்குத்து நிகழ்த்தியவரின் குழந்தையை மோதி உள்ளது என அடையாளம் தெரியாத ஒருவர் சாட்சி கூறியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சீன நாட்டில் வன்முறை குற்றங்கள் அரிதாக நடந்தாலும், குழந்தைகளின் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்துவது சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பள்ளியில் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்தது. இதில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர், சிலர் காயமடைந்தனர்.
இதேபோல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தெற்கு சீனாவில் உள்ள பள்ளியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் 37 மாணவர்களும், இரண்டு பெரியவர்களும் காயம் அடைந்தனர்.
அதே ஆண்டு குவாங்சி பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளியில் கத்திக்குத்து சம்பவத்தால் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். அதில் 16 பேர் காயமடைந்தனர்.
பொதுவாக இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பொதுவாகக் கத்தியை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். சீனாவில் துப்பாக்கிகள் பெரும்பாலான இடங்களில் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: