Case against BJP leaders: கர்நாடகாவில் ரூ.2.55 மோசடி புகார்-3 பாஜக பிரமுகர்கள் மீது வழக்கு
Jan 08, 2024, 11:15 AM IST
சிவமூர்த்தி என்பவர், முதல்வர் சித்தராமையா மற்றும் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வர் ஆகியோரிடம் நீதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு விஜயநகர மாவட்டத்தில் கட்சியிடம் பேசி தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கி தருவதாகக் கூறி ஒரு நபரிடம் ரூ.2.55 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மூன்று பாரதிய ஜனதா பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற பொறியாளர் பி.சிவமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கோட்டூர் போலீஸார், பாஜக முன்னாள் தலைவர் மோகன் கட்டாரியா, உள்ளூர் தலைவர்கள் ரேவணா சித்தப்பா, சேகர் புருஷோத்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி சிவமூர்த்தியை பாஜக தலைவர்கள் தவறாக வழிநடத்தி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மூன்று பிரமுகர்களும் தனக்கு ஹகரிபொம்மனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில், பட்டியல் சாதிக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதியில் பாஜக சீட்டு வழங்குவதாக கூறியதாக சிவமூர்த்தி புகார் அளித்தார்.
ரூ.2.55 கோடி மோசடி செய்ததாக சிவமூர்த்தியின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவமூர்த்தி, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் உள்துறை அமைச்சர் ஜி பரமேஷ்வர் ஆகியோருக்கும் கடிதம் எழுதினார். மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பான தகவல்களை அவர் அளித்து, தவறு செய்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கவும், தனது பணத்தை திரும்பப் பெற வசதி செய்யவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து கோட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கீதாஞ்சலி கூறுகையில், "சிவ மூர்த்தியின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது ஐபிசி பிரிவு 420 (ஏமாற்றுதல்) 506 (உயிர் அச்சுறுத்தல்) மற்றும் 34 (சில நபர்கள் செய்த குற்றச் செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றுி கூறினார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
டாபிக்ஸ்