தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Katchatheevu: புறக்கணித்த இந்தியர்கள்.. கொடியேற்றிய இலங்கையர்கள்.. கலையிழந்த கச்சத்தீவு திருவிழா!

Katchatheevu: புறக்கணித்த இந்தியர்கள்.. கொடியேற்றிய இலங்கையர்கள்.. கலையிழந்த கச்சத்தீவு திருவிழா!

Feb 23, 2024, 09:47 PM IST

  • தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து சிறையில் அடைத்து வருவது மட்டுமல்லாது படகோட்டிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்து வருவதனால் அதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தங்களுடைய படகுகளில் கருப்புக்கொடி கட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை- இந்திய உறவை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் திருவிழாவிற்கு இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து மீனவர்கள் மற்றும் பக்தர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய தரப்பிலிருந்து கச்சத்தீவு திருவிழாவில் யாரும் பங்கேற்காத நிலையில் இலங்கை பக்தர்கள் மட்டும் பங்கேற்று உள்ளனர். இன்று மாலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவில் நெடுந்தீவு பங்குத்தந்தை , யாழ்ப்பாணம் பங்குத்தந்தை இலங்கை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று இரவு முழுவதும் பங்குத் தந்தைகள் ஜெப பிரார்த்தனையில் ஈடுபட்டு நாளை காலை புனித அந்தோணியார் தேர் பவனி உடன் இந்த திருவிழா நிறைவடையும். இந்தியா தரப்பில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கச்சத்தீவு திருவிழா களையிலந்து காணப்படுகிறது.