Nigeria Military Coup: நைஜீரியாவில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்
Jul 28, 2023, 08:12 AM IST
ராணுவம் ஆட்சியை கைப்பற்றி நிலையில் அந்நாட்டு அரசு அலுவலங்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நைஜீரியா நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
நைஜீரியா நாட்டில் திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதுமட்டும் இல்லாமல் நைஜீரிய அதிபர் முகமது பசோவ்ம் கைது செய்துள்ளது. அந்த நாட்டின் அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் ஆட்சியை கைப்பற்றி நிலையில் அந்நாட்டு அரசு அலுவலங்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் அனைத்து எல்லைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நைஜீரியாவின் உள்நாட்டு நிலவரம் குறித்து வெளி உலகிற்கு தெரியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்