’3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார் கேசிஆர்! அதிரவிடுகிறார் ரேவந்த் ரெட்டி!’
Dec 03, 2023, 12:02 PM IST
”Telangana Results 2023: காம ரெட்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் உள்ளார்”
காமரெட்டி தொகுதியில் தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
காம ரெட்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் உள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
119 தொகுதிகளை கொண்ட தெங்கானா மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா (BJP) கட்சிகள் போட்டியிட்டன.
3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தலில் 221 பெண் வேட்பாளர்கள், ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் உட்பட 109 கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 103 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை போட்டியிட மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்தவர்.
முதலமைச்சர் சந்திரசேகரர் ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காமரெட்டி தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியும், கஜ்வெல் தொகுதியில் பாஜக தலைவர் எட்டலா ராஜேந்தரும் கேசிஆருக்கு எதிராக களம் இறங்கினர்.
காமரெட்டி தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி முன்னிலை வகிக்கும் நிலையில், தெலங்கானா மாநில முதலமைச்சர் கேசிஆர் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கேசிஆர் போட்டியிட்டுள்ள மற்றொரு தொகுதியான கஜ்வெல் தொகுதியில் கேசிஆர் முன்னிலை பெற்றுள்ளார். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 66 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பி.ஆர்.எஸ் கட்சி 41 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.