தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Elections Results Live: ‘மக்களுக்கு நன்றி'-காங்கிரஸ் எம்.பி. ராகுல்

Elections Results Live: ‘மக்களுக்கு நன்றி'-காங்கிரஸ் எம்.பி. ராகுல்

Dec 03, 2023, 06:24 PM IST

google News
Elections Results 2023: தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், மிசோரம் தவிர 4 மாநிலங்களுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. யார் அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது? உடனடி தகவல்களை வழங்குகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.
Elections Results 2023: தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், மிசோரம் தவிர 4 மாநிலங்களுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. யார் அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது? உடனடி தகவல்களை வழங்குகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.

Elections Results 2023: தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், மிசோரம் தவிர 4 மாநிலங்களுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. யார் அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது? உடனடி தகவல்களை வழங்குகிறது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.

4 மாநிலத் தேர்தல்-ராகுல் கருத்து

Assembly Election Results 2023 Live Updates: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில மக்களின் முடிவுகளை தலைவணங்கி ஏற்கிறேன். எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த தெலங்கானா மக்களுக்கு மிக்க நன்றி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் ட்வீட்

Rajasthan Assembly Election Results 2023 Live Updates:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் மக்கள் அளித்த ஆணையை நாங்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இது அனைவருக்கும் எதிர்பாராத முடிவு. எங்கள் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதில் நாம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதை இந்த தோல்வி காட்டுகிறது. புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”  என்றார்.

தோல்வியை ஏற்றுக் கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி

Telangana Election Results: தெலங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி. தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி என அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்

இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு கற்று மீண்டும் எழுச்சியுடன் வருவோம் எனவும், ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

டெபாசிட் இழக்கிறது பவன் கல்யாண் கட்சி

Telangana Election Results: நடிகர் பவன் கல்யாணின், ஜன சேனா கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறது

 

தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை: தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி 

Telangana Election Results: தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 60 தொகுதி வெற்றிபெற்றால் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். இந்நிலையில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாரத் ராஷ்டிரிய சமிதி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 9 தொகுதிகளில் முதன்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் பொதுவெளியில் தோன்றி தனது கட்சித்தொண்டர்களுக்கு, காங்கிரஸ் முன்னிலை வகிப்பதற்கு உழைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

Assembly Election Results 2023 Live Updates : மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிமுகத்தில் உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

குலாம் நபி ஆசாத் பேட்டி

Congress: தேர்தல் முடிவுகள் குறித்து ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “கடந்த 20-25 நாட்களில் நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், சிறுபான்மையினரின் சாம்பியனாக கருதப்பட்ட காங்கிரஸ், சிறுபான்மையினரைப் பற்றி பேசவில்லை. இப்போது சிறுபான்மையினர் காங்கிரஸின் நிகழ்ச்சி நிரலில் இல்லை” என்றார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி

Telangana Assembly Election Results 2023 Live Updates : தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து டி.ஜி.பி உள்பட காவல் உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Election Results 2023 Live Updates: தேர்தல் முடிவுகள்!

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 230/230 (மெஜாரிட்டி-116)

பாஜக - 160

காங்கிரஸ் - 68

பகுஜன் - 00

மற்றவை - 02

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 119/119 (மெஜாரிட்டி-60)

காங்கிரஸ் - 65

பிஆர்எஸ் - 42

பாஜக - 09

மற்ற-03

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 199/199 (மெஜாரிட்டி-101)

பாஜக-108

காங்-75

பகுஜன்-00

மற்ற-16

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 90/90 (மெஜாரிட்டி-46)

காங்-29

பாஜக-59

ஜெசிசி-00

மற்ற-02

சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை!

Chhattisgarh Election Results 2023 Live Updates: சத்தீஸ்கரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில், தற்போது அங்கு பாஜக முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தானில் பாஜக தொண்டர்கள் உற்சாகம்

Rajasthan Assembly Election Results 2023 Live Updates : ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி (BJP) முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து ராஜஸ்தானில் பாஜக தொண்டர்கள் உற்சாகம். கட்சி அலுவலகம் முன்பு ஆடிபாடி மகிழ்ந்தனர்.

தெலங்கானாவில் புதிய முதல்வர் ஆகிறார் ரேவந்த் ரெட்டி! விக்கீபிடியா வெடித்தது சர்ச்சை!

Telangana Assembly Election Results 2023 Live Updates: தெலங்கானாவில் 2ஆவது முதலமைச்சராக பணியாற்ற உள்ளார் என விக்கீபீடியா தனது கட்டுரையில் பதிவிட்டுள்ளது பேசு பொருள் ஆகி உள்ளது.

வெற்றிப் பாதையில் காங்கிரஸ்!

Telangana Assembly Election Results 2023 Live Updates: தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.பி., உத்தம் குமார் ரெட்டி கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். தெலுங்கானா மக்களின் இதயங்களில் காந்தி குடும்பத்திற்கு தனி இடம் உள்ளது. 2014 மற்றும் 2018 தேர்தல்களில் தவறு செய்தோம். இந்த முறை நாங்கள் நம்மைத் திருத்திக் கொண்டு, நாம் வெற்றிப் பாதையில் செல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள்!

Rajasthan Assembly Election Results 2023 Live Updates : சர்தார்புரா தொகுதியில் முதலமைச்சர் அஷோக் கெலாட், டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் முன்னிலை வகிக்கின்றனர்.

கே.டி.ராமராவ் முன்னிலை!

Telangana Assembly Election Results 2023 Live Updates: தெலுங்கானாவின் சிர்சில்லா  முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும். ஆரம்பகால போக்குகளின்படி, கே.சி.ஆரின் மகன் கே.டி.ராமராவ் அவரது முன்னிலை வகிக்கிறார், மகேந்தர் ரெட்டி பின்தங்கியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், கே.டி.ராமராவ் இதுவரை 10199 வாக்குகளையும், மகேந்தர் ரெட்டி 7578 வாக்குகளையும் பெற்று பின்தங்கியுள்ளார்.

ராஜஸ்தானில் பாஜக முன்னிலை!

Rajasthan Assembly Election Results 2023 Live Updates: ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி (BJP) முன்னிலை வகிக்கிறது, இது ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது. எதிர்க்கட்சியான பாஜக 100 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 78 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.

சட்டீஸ்கரில் காங்கிரஸ் பின்னடைவு!

Chhattisgarh Election Results 2023 Live Updates: 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 53 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - சிவராஜ் சிங் சவுகான்!

Madhya Pradesh Election Results 2023 Live Updates: மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்,பாஜகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பாஜக மூத்தத் தலைவரும், அம்மாநில முதலைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னிலை -தொண்டர்கள் கொண்டாட்டம்!

Telangana Assembly Election Results 2023 Live Updates: தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தெலங்கானா முன்னிலை நிலவரம்!

Telangana Assembly Election Results 2023 Live Updates: காமாரெட்டி தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். முதல் இடத்தில் காங்கிரசும், இரண்டாம் இடத்தில் பாஜகாவும் உள்ளது.

Election Results 2023 Live Updates: தேர்தல் முடிவுகள் -10 மணி முன்னிலை நிலவரம் !

தெலங்கானா

காங். -68,

பிஆர்எஸ் -40

பாஜக -7

ம.பி : காங். - 98, பாஜக -130

ராஜஸ்தான்: காங். - 82, பாஜக - 101

சத்தீஸ்கர்: காங். - 50, பாஜக - 40

2 தொகுதிகளிலும் சந்திரசேகர ராவ் பின்னடைவு

Telangana Assembly Election Results 2023 Live Updates: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட கம்மாரெட்டி, கஜ்வல் தொகுதிகளில் பின்னடைவு

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

Chhattisgarh Election Results 2023 Live Updates: 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி 46 இடங்களிலும், பாஜக 37 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது

தெலுங்கானா தற்போதைய நிலவரம்

Telangana Assembly Election Results 2023 Live Updates : 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி 51 இடங்களிலிம், பாரத ராஷ்டிர சமிதி கட்சி 34 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை

Madhya Pradesh Election Results 2023 Live Updates: 230 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பாஜக 111 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 90 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

முன்னிலை நிலவரம்!

Election Results 2023 : தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் தங்களது தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன்ர்.

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்!

Rajasthan Assembly Election Results 2023 Live Updates: தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.ராஜஸ்தான் பொறுத்தவரை காங்கிரஸ் 61 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 54 தொகுதிகளிலும், மற்றவை 8 தொகுதிகளில் உள்ளது.

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்!

Chhattisgarh Election Results 2023 Live Updates: தற்போதைய நிலவரப்படி சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சதீஸ்கர் பொறுத்தவரை காங்கிரஸ் 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 20 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளில் உள்ளது.

Election Results 2023 : தபால் வாக்கு முன்னிலை நிலவரம்

மா.பி

காங்கிரஸ் - 71

பாஜக - 63

தெலுங்கானா

காங்கிரஸ் - 38

பிஆர்எஸ் -16

பாஜக - 1

சத்தீஸ்கர்

காங்கிரஸ் - 40

பாஜக - 24

ராஜஸ்தான்

காங்கிரஸ் - 60

பாஜக - 54

4 மாநில தேர்தல் முடிவுகள்!

Election Results 2023 : 4 மாநில தேர்தல் முடிவுகளில் தொடக்க வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

Election Results 2023 Live Updates: இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் பெரும்பான்மைக்கு 46 சீட்கள் தேவை!

Chhattisgarh Election Results 2023 Live Updates: சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 46 சீட்கள் தேவை. புபேஷ் பாகல் தலைமையிலான அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இது தவிர பகுஜுன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் அங்கே ஆட்சியில் உள்ளன.

ராஜஸ்தான் பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை!

Rajasthan Assembly Election Results 2023 Live Updates: ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட காங்கிரஸ் பாஜக தான் போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தானில் 200 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை. இதுவரை மாறி மாறியே இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடித்து வந்துள்ள நிலையில், இந்த முறை என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும். காங்., பாஜக தவிர பகுஜுன் சமாஜ், ராஷ்டிரிய லோக்தந்திரிக், ஆம் ஆத்மி கட்சிகளும் களத்தில் உள்ளன

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம்!

Madhya Pradesh Election Results 2023 Live Updates: மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கே 230 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. இந்த முறை முதலில் காங்கிரசுக்கு சாதகமான சூழல் அங்கே நிலவிய போதிலும் இறுதியில் பாஜக தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியது. அதற்கு நல்ல பலன் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதனால் அங்கே கடும் போட்டி இருக்கிறது.

தெலுங்கானா பொறுத்தவரை பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை!

Telangana Assembly Election Results 2023 Live Updates : தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கிறது. பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை. அங்கே கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், 3ஆவது முறையாக வெல்லும் நோக்கில் பிஆர்எஸ் களமிறங்குகிறது. அங்கே காங்கிரஸ் கடும் போட்டியை கொடுத்து வருகிறது.

சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிப்பது யார்?

Chhattisgarh Election Results 2023 Live Updates: சத்தீஸ்கரில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், யார் அங்கு ஆட்சியை பிடிப்பது என்பதை இன்று நொடிக்கு நொடி அறியலாம்.

மத்திய பிரதேசத்தில் யார் ஆட்சி அமைப்பது?

Madhya Pradesh Election Results 2023 Live Updates: மத்திய பிரதேசத்தின் மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக? மாற்றத்தை தருமா காங்கிரஸ்? இன்று முடிவு தெரியும்!

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிப்பது யார்?

Rajasthan Assembly Election Results 2023 Live Updates: ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பாஜக ஆட்சியை அமைக்குமா? என்பதற்கு இன்று விடை கிடைக்கும்.

தெலங்கானாவில் ஆட்சி பிடிப்பது யார்?

Telangana Assembly Election Results 2023 Live Updates: தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி-காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பாஜக, யார் ஆட்சியை பிடிப்பது என்பதை முடிவு செய்யுமா என்பதைப் பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை