தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Neet-ug 2024:'தேசிய தேர்வு முகமை நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும்': குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; அம்சங்கள்

NEET-UG 2024:'தேசிய தேர்வு முகமை நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும்': குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; அம்சங்கள்

Marimuthu M HT Tamil

Aug 02, 2024, 01:27 PM IST

google News
NEET-UG 2024: தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு சரிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (saikat paul)
NEET-UG 2024: தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு சரிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

NEET-UG 2024: தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு சரிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

NEET-UG 2024: நீட் இளங்கலை தேர்வு தொடர்பாக தேசிய தேர்வு முகமை முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 2ஆம் தேதி) கூறியுள்ளது.

தேசிய தேர்வில் இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற மற்றும் மதிப்பெண் முறைகேட்டினால் நுகழும் பதற்றங்கள் மாணவர்களின் நலன்களுக்கு உதவாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீட் இளங்கலை உச்ச நீதிமன்றம் அடுக்கிய முக்கிய கருத்துகள்:

2024 நீட் இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யாததற்கான காரணங்களைக் கொண்ட தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதில் நீட் இளங்கலை தேர்வில் வினாத்தாள் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற முறைகேடுகள் குறித்து கடுமையான சர்ச்சை இருந்தபோதிலும்; தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிபுணர் குழு சரி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு செயல்முறைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் எடுத்துக்காட்டியது. மேலும் "மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தேசிய தேர்வு முகமை, இதுபோன்ற பிரச்னைகளை எல்லாம் கொண்டுவரும்படி இருக்கக்கூடாது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீட் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகளை இந்த ஆண்டே மத்திய அரசு சரிசெய்ய வேண்டும் எனவும்; இதனால் அது மீண்டும் நிகழாது என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் கூறியது.

எவ்வாறாயினும், நீட்-இளங்கலை 2024 ஆவணங்களில் முறையான மீறல் எதுவும் இல்லை என்றும், வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாக் பகுதியில் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

நீட் இளங்கலை தேர்வில் இருக்கும் குறைபாடுகளை களைய மத்திய அரசின் குழுவின் உதவி தேவை:

நீட் தேர்வு முறையின் இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட அடையாள சோதனைகளுக்கான செயல்முறைகள், தேர்வு மையங்களின் சிசிடிவி கேமரா கண்காணிப்பு ஆகியவற்றில் சாத்தியமான பலவீனங்களை அடையாளம் காண தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) உருவாக்குவது குறித்தும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிசீலித்து வருவதாகவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வரம்புகள்:

தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்யவும், தேர்வு சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் வரம்பையும் உச்ச நீதிமன்ற அமர்வு வெளியிட்டது.

குழுவின் பணிக்காலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்த குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அது கூறியது.

தேர்வு முறையை வலுப்படுத்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை உருவாக்குவது குறித்து ராதாகிருஷ்ணன் குழு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

நீட்- இளங்கலை தேர்வின்போது எழுந்த பிரச்னைகளை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீட் யுஜி 2024 குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு:

ஜூலை 23அன்று, சர்ச்சைகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த தேர்வின் புனிதத்தை "சீர்குலைக்கப்பட்டது" என்று முடிவு செய்ய எந்த ஆதாரமும் பதிவில் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

உச்ச நீதிமன்றம், இந்த உத்தரவை அறிவிக்கும்போது, அதன் விரிவான காரணங்கள் பின்பற்றப்படும் என்று தெரிவித்தது.

மேலும் மே 5ஆம் தேதி நடைபெற்ற மதிப்புமிக்க தேர்வில் வினாத்தாள் கசிவு, மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற பெரிய அளவிலான முறைகேடுகள் தொடர்பாக வீதிகளிலும் நாடாளுமன்றத்திலும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்த இடைக்கால தீர்ப்பு ஒரு குட்டு ஆகும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் மற்றும் பிற தொடர்புடைய படிப்புகளில் சேர்க்கைக்காக 2024ஆம் ஆண்டில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய தகுதி நுழைவுத் தேர்வினை (நீட்-யுஜி) எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை