தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கருக்கலைப்பு செய்யப் பெண்களுக்கு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம்!

கருக்கலைப்பு செய்யப் பெண்களுக்கு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம்!

Sep 29, 2022, 06:25 PM IST

google News
பெண்கள் பாதுகாப்பான மருத்துவ முறையில் தங்களது கருவைக் கலைத்துக் கொள்ள சட்டப்பூர்வமாக உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனது கருவைக் கலைக்க மருத்துவ முறையில் உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு," ஒரு பெண் தனது கருவைக் கலைக்க முடிவு செய்துவிட்டால் அதனை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது கிடையாது. இதனை மருத்துவ கருவுறுதல் சட்டம் 1971 (MTP) அனுமதிக்கிறது.

இது திருமணமானவர்கள் அல்லது திருமணம் ஆகாதவர்கள் என்ற பாகுபாடு கிடையாது. எந்த சூழ்நிலையிலும் பெண்கள் மருத்துவ முறையில் பாதுகாப்பாக தங்களது கருவைக் கலைத்துக் கொள்ளலாம் என சட்டப்பூர்வமாக உரிமை உள்ளது.

அதேசமயம் திருமணமான பெண்கள் வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தருகிறார்கள். இதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த சட்டம் உதவியாக உள்ளது. அதே போல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் கர்ப்பம் தரித்தால் அதனைக் கலைத்துக் கொள்ள சட்டப்பூர்வமாக உரிமை உண்டு" எனத் தெரிவித்தது.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை