தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஐபிஎல் முடிவுகளில் மோசடி...சுப்ரமணியன் சுவாமி பகீர் தகவல்

ஐபிஎல் முடிவுகளில் மோசடி...சுப்ரமணியன் சுவாமி பகீர் தகவல்

Jun 04, 2022, 01:09 PM IST

google News
ஐபிஎல் போட்டிகளின் முடிவில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின் முடிவில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின் முடிவில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 15வது சீசன் கூடுதல் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 26 தொடங்கி மே 29 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத விதமாக புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளுள் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை தட்டிச் சென்றது. மற்றொரு முக்கிய அம்சமாக இந்த சீசனில் இதுவரை கோப்பை வாங்கி சாம்பியன் அணிகளாக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ப்ளேஆப் கூட தகுதி பெறாமல் வெளியேறின.

அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடர்களில் அரங்கேறும் பல்வேறு விதமான சர்ச்சைகள், பரபரப்பான நிகழ்வுகள் ஏதுமின்றி உப்பச்சப்பில்லாத தொடராக அமைந்தது.

இதையடுத்து இந்த சீசனின் முடிவுகளில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பகீர் கிளப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "டாடா ஐபிஎல் தொடர் போட்டிகளின் முடிவுகளில் மோசடி நடைபெற்று இருக்கலாம் என புலனாய்வு அமைப்பினர் இடையே பரவலாக கருதப்படுகிறது. இதை தெளிவுபடுத்தவது அவசிமானதாக இருப்பதால், பொதுநல வழக்கு தொடரலாம். ஆனால் அரசு இதைச் செய்யாது. ஏனென்றால் அமித்ஷாவின் மகன் தற்போது பிசிசிஐ-யின் நடைமுறை சர்வாதிகாரியாக இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மோசடிகள் நடைபெறுவதாக குறிப்பிடுவது இதுமுதல் முறை அல்ல. ஏற்கனவே 2013ஆம் சீசனில் ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அந்த இரு அணிகளுக்கும் இரண்டு ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து நட்சத்திர வீரர்கள் பெரிதாக யாரும் இல்லாமல், முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்ற ஹர்திக் பாண்ட்யா அணியை சிறப்பாக வழிநடத்தி குஜராத் அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதே சமயம் அமித்ஷா மகன் ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக இருப்பதால் அந்த அணியின் வெற்றி சாத்தியமாகியிருக்கலாம் என்று கருத்துகளும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி