10-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. கழுத்தை நெரித்து ஆட்டோவில் இருந்து தூக்கிய வீசிய கொடூரம்!
Jan 06, 2024, 08:45 PM IST
ஜிராக்பூரில் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வழிமறித்து, தனது நட்பை ஏற்க மறுத்ததால் அவரைத் தாக்கி பாலியல் துன்புறுத்திய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர், சந்தர்பன் என அடையாளம் காணப்பட்டவர். இவர் தேரா பாசியில் வசிக்கிறார். ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார். நவம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பால்டானா சந்தையில் ஷாப்பிங்கிற்காக 14 வயது சிறுமி வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் அவளை தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
தன்னுடம் நட்பு கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் சிறுமி அவனை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் சிறுமி கழுத்தை நெரித்து அவளை மயக்கமடையச் செய்தான். பின்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் அவர் ஜிராக்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வாகனத்தில் இருந்து சிறுமியை தூக்கி எறிந்தார்.
இதில் சிறுமிக்கு கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் பார்த்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் சிறுமியை மீட்டு சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 323 (தாக்குதல்), 341 (தவறான கட்டுப்பாடு) மற்றும் 354-டி (பின்தொடர்தல்) மற்றும் ஜிராக்பூர் காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்