தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Akhilesh Yadav : சமாஜ்வாதி கட்சி 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!

Akhilesh Yadav : சமாஜ்வாதி கட்சி 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!

Divya Sekar HT Tamil

Oct 23, 2023, 07:49 AM IST

google News
பன்னா, மங்கவான், குவாலியர் கிழக்கு, மெஹ்கான், கோவிந்த்புரா, பண்டா, ஜௌரா, கோஹாத், கர்காபூர், மஹராஜ்பூர், சத்தர்பூர் மற்றும் தேவதலாப் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்தது.
பன்னா, மங்கவான், குவாலியர் கிழக்கு, மெஹ்கான், கோவிந்த்புரா, பண்டா, ஜௌரா, கோஹாத், கர்காபூர், மஹராஜ்பூர், சத்தர்பூர் மற்றும் தேவதலாப் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்தது.

பன்னா, மங்கவான், குவாலியர் கிழக்கு, மெஹ்கான், கோவிந்த்புரா, பண்டா, ஜௌரா, கோஹாத், கர்காபூர், மஹராஜ்பூர், சத்தர்பூர் மற்றும் தேவதலாப் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்தது.

லக்னோ: மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி நேற்று இரவு வெளியிட்டது. நான்காவது பட்டியலில் 12 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய இந்திய மாநிலத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி நிறுத்தியுள்ள மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

பன்னா, மங்கவான், குவாலியர் கிழக்கு, மெஹ்கான், கோவிந்த்புரா, பண்டா, ஜௌரா, கோஹாத், கர்காபூர், மஹராஜ்பூர், சத்தர்பூர் மற்றும் தேவதலாப் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவித்தது.

உத்தரப்பிரதேசத்தில் இந்தியக் கூட்டணியின் இரண்டு முக்கிய புள்ளிகளான  சமாஜ்வாதி கட்சி  மற்றும் காங்கிரஸுக்கு இடையே நடந்து வரும் பதற்றத்தில் SP தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த நான்காவது பட்டியலை வெளியிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. ஆனால், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் சில தொகுதிகளில் போட்டியிட விரும்பியது.

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளில் தங்கள் கட்சி வெற்றி பெற்றதால், தங்களுக்கும் சீட் வேண்டும் என்பது அகிலேஷ் யாதவின் கோரிக்கை. ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால், அதிருப்தி அடைந்த அகிலேஷ் யாதவ் கடந்த சில நாட்களாவே காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமையன்று கிலேஷ் யாதவ், "அவர்கள் எங்களுக்கு நான்கு இடங்களை மட்டுமே வழங்கியிருந்தாலும், நாங்கள் அதில் திருப்தி அடைந்திருப்போம்" என்று ஏற்கனவே கூறியிருந்தார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தும், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கும் சமாஜவாதி கட்சியுடன் நள்ளிரவில் கூட்டணி விவாதங்கள் நடத்திய போதிலும், சமாஜ்வாதி கட்சிக்கு எப்படி துரோகம் இழைத்தனர் என்பதை விவரிக்கும் போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். 

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி அறிவிக்கத் தொடங்கியபோதும், மத்தியப் பிரதேசத் தேர்தலுக்கான கட்சி அறிக்கையை வெளியிட்டபோதும் இரு கட்சிகளுக்கும் இடையே வாய்ச் சண்டை அதிகரித்தது.

இருப்பினும், சனிக்கிழமை அகிலேஷ் அறிக்கைக்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையேயான வார்த்தைப் போர் நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, கட்சியின் எம்பி தேர்தல் மேலாளர்களுடன் அகிலேஷ் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்திற்குப் பிறகு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், “மத்திய பிரதேசத்தில் உடன்பாடு இல்லாமல் போட்டியிட்டாலும், அது காங்கிரஸுடன் நட்புரீதியான போட்டியாக இருக்கும். ம.பி.யில் பாஜகவை தோற்கடிப்பதே நோக்கம்” என்றார்.

சமாஜ்வாதி கட்சியின் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினரும், உ.பி.,யின் முன்னாள் அமைச்சருமான வியாஸ்ஜி கோண்ட் கூறுகையில், “சமாஜவாதி கட்சிக்கும், காங்கிரஸ் மேலிடத்துக்கும் இடையே தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை மாநிலங்களில் இருந்தும், அதைத் தொடர்ந்து மத்தியில் இருந்தும் வெளியேற்றுவதற்குத் தேவையான எந்த உடன்படிக்கையையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

வேட்புமனு தாக்கல் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும். மத்தியப் பிரதேச வாக்காளர்கள் நவம்பர் 17ஆம் தேதி வாக்களிப்பார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை