Sharad Pawar About ED: ’ஏஜென்சிகள் மிரட்டலால் எங்கள் நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவினர்’ சரத்பவார்
Aug 20, 2023, 08:16 PM IST
”பாஜகவில் இணைய மறுத்தால் சிறை செல்வீர்கள் என மிரட்டப்பட்டதாகவும் சரத்பவார் கூறினார்”
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், கூறுகையில், "சமீபத்தில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் தொகுதி வளர்ச்சியில் பிரச்னை உள்ளதாக கூறி பாஜகவுடன் கைகோர்த்தனர் கூறி அரசாங்கத்தில் இணைந்தனர். அவர்களில் சிலர் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளனர். அவர்களில் சிலர் விசாரணையை எதிர்கொள்ள விரும்பவில்லை" என்று சரத் பவார் கூறினார்.
முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கைப் பாராட்டிய சரத்பவார், அனில் தேஷ்முக் போன்ற சிலர் சிறைக்குச் செல்வதை ஏற்றுக்கொண்டு 14 மாதங்கள் சிறையிலேயே இருந்தார்கள். விசாரணையைத் தவிர்ப்பதற்காக அவர்கள் பாஜக பக்கம் சேரவும் அவர் முன்வந்தார். ஆனால் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை, அவருடைய சித்தாந்தத்தை விட்டு விலக விரும்பவில்லை என்ற சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏஜென்சிகளால் அச்சுறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவில் இணைய மறுத்தால் சிறை செல்வீர்கள் என மிரட்டப்பட்டதாகவும் சரத்பவார் கூறினார்.
சமீபத்தில் அரசால் கையகப்படுத்தப்பட்ட காந்திய நிறுவனமான அகில் பாரத் சர்வ சேவா சங்கத்திற்கு சொந்தமான நிலம் குறித்து சரத் பவார் பேசுகையில், “வாரணாசியில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார், காந்திய பொருட்களை எடுத்துச் செல்ல வாங்கப்பட்ட நிலம். ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் நிறுவனத்தை மூடச் சொல்லப்பட்டது.
ஆனால், அவர்கள் செவிசாய்க்கவில்லை. பின்னர் அந்த நிலத்தை அரசு வலுக்கட்டாயமாக கைப்பற்றியது, அந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அனைத்தும் காந்தி சிலைக்கு அருகில் வீசப்பட்டன என சரத் பவார் கூறினார்.
டாபிக்ஸ்