தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Sharad Pawar: மகாராஷ்டிர அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் சரத் பவாரின் பிறந்த நாள் இன்று!

HBD Sharad Pawar: மகாராஷ்டிர அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர் சரத் பவாரின் பிறந்த நாள் இன்று!

Manigandan K T HT Tamil

Dec 12, 2023, 06:30 AM IST

google News
அரசியலுக்கு அப்பாற்பட்டு, சரத் பவார் 2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், 2010 முதல் 2012 வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். (HT_PRINT)
அரசியலுக்கு அப்பாற்பட்டு, சரத் பவார் 2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், 2010 முதல் 2012 வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, சரத் பவார் 2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், 2010 முதல் 2012 வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சரத் பவார் இந்திய அளவில் மிக முக்கியமான அரசியல்வாதி ஆவார். அவர் நான்கு முறை மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி வகித்திருக்கிறார். மத்திய அமைச்சர்கள் குழுவில் P.V நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகவும், மன்மோகன் சிங் அமைச்சரவையில் விவசாய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து 1999 இல் அவர் நிறுவிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) முதல் மற்றும் தற்போதைய தலைவர் அவரே ஆவார். அவர் இந்திய நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் NCP குழுவை வழிநடத்துகிறார்.

சரத் பவார் மகாராஷ்டிராவின் பாராமதியை சேர்ந்தவர். அவர் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் வந்தவர். அவரது மகள் சுப்ரியா சுலே, அஜீத் பவார் அவரது மருமகன், ரோஹித் ராஜேந்திர பவார் மருமகனின் மகன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் உள்ளனர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, சரத் பவார் 2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும், 2010 முதல் 2012 வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அக்டோபர் 2013 முதல் ஜனவரி 2017 வரை மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். சரத் பவாருக்கு கிரிக்கெட்டிற்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவரது மனைவி கிரிக்கெட் வீரரின் மகள் ஆவார்.

சரத் பவார் பிசிசிஐ தலைவராக இருந்தபோது 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.

ஐசிசி தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில் 2011இல் தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர்கள் கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

2017 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் அவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் வழங்கியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை