தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Jaggi Vasudev: மூளையில் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் - வீடியோ

Jaggi Vasudev: மூளையில் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் - வீடியோ

Karthikeyan S HT Tamil

Mar 27, 2024, 08:19 PM IST

google News
Sadhguru Jaggi Vasudev: சத்குரு வாசுதேவின் மூளையில் 'உயிருக்கு ஆபத்தான' இரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. (ANI)
Sadhguru Jaggi Vasudev: சத்குரு வாசுதேவின் மூளையில் 'உயிருக்கு ஆபத்தான' இரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Sadhguru Jaggi Vasudev: சத்குரு வாசுதேவின் மூளையில் 'உயிருக்கு ஆபத்தான' இரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆன்மீக குருவும், ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சத்குருவை அவரது ரசிகர்கள் வரவேற்கும்போது மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதைக் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

முன்னதாக, சத்குரு வேகமாக குணமடைந்து வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்திருந்தது. "சத்குரு நன்றாக குணமடைந்து சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறார். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று ஈஷா அறக்கட்டளை கூறியிருந்தது. .

அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி, சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'சத்குரு அவர்கள் உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்." என்றார். 

சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர் த்யாகி, டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஈஷா அறக்கட்டளை மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மருத்துவமனையில் இருந்தபோது, சத்குரு "உன்னில் என்னைத் தொலைத்தேன்" என்ற தலைப்பில் ஒரு கவிதையையும் எழுதினார்.

"உச்சகட்ட வலியிலும், இன்பத்திலும், அதீத உற்சாகத்திலும், சமநிலையிலும். உள் இயக்கவியலை அறியும் இந்த விஞ்ஞானம் என்னை ஒரு கணம் கூட கைவிடவில்லை. உச்சங்களையும், பள்ளத்தாக்குகளையும், சமவெளிகளையும் கடந்து, அதீத ஒழுக்கத்துடனும், கைவிடப்பட்ட வாழ்க்கையுடனும் வாழ்ந்த நான் ஏன் இன்னும் இங்கே இருக்கிறேன்" என்று கவிதை கூறுகிறது.

"உன்னிடமும், நீயும், உன் மீதும் அன்பும், அசையும் மற்றும் செய்யாத அனைத்தின் மீதும் அன்பு செலுத்துங்கள். உங்கள் அனைவரிடமிருந்தும் அளவற்ற அன்பு. உங்கள் அன்பில் மூழ்கியிருப்பதற்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உன்னில் என்னை இழந்து சில காலம் நீயும் நானும் எங்கே?" என்று சத்குருவின் கவிதை கூறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உட்பட பல தலைவர்கள் சத்குருவிடம் பேசி அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், விரைவாக குணமடையவும் வாழ்த்தினர்.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக "மண்ணைக் காப்போம்", "நதிகளுக்கான பேரணி" போன்ற இயக்கங்களைத் தொடங்கி நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி