தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sabarimala: மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

Sabarimala: மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

Karthikeyan S HT Tamil

Aug 17, 2022, 02:09 PM IST

மலையாள சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.
மலையாள சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.

மலையாள சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: மலையாள சிங்கம் மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி என்.பரமேஸ்வரன் நம்பூதிரி நடையைத் திறந்துவைத்து தீபம் காட்டினார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் 5 நாட்கள் பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

சுவாமி தரிசனத்துக்காக கடந்த 5 ஆம் தேதி ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் நேரடியாக கோயிலுக்குச் சென்ற பக்தர்களுக்கு நிலக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் முன்பதிவு செய்து சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கமாக மாதந்திர பூஜைக்காக திறக்கப்படும் அன்று மாலை பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் வசதிக்காக மாதந்திர பூஜைக்காக திறக்கப்பட்ட நாளிலேயே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். வருகிற 21ஆம் நடைபெறும் பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப்பட்டு இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.

ஐயப்பன் கோயில் ஓணம் பண்டிகைக்காக அடுத்த மாதம் 6ஆம் தேதி திறக்கப்படும் என்றும் 8ஆம் தேதி திருவோண சிறப்பு வழிபாடு நடைபெறும் என்றும் செப்டம்பர் 10 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்