Ukraine war: உக்ரைனில் திடீரென புகுந்த புதின் - ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை - திடீர் பரிசு
Apr 19, 2023, 06:52 AM IST
ரஷ்யப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் பகுதிக்கு திடீரென ரஷ்ய அதிபர் புதின் நேரில் சென்று பார்வையிட்டார்.
உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் போர் தொடங்கி ஓராண்டு கடந்து விட்டது. பல நாடுகள் போரை நிறுத்த கூறியும் ரஷ்யா நிறுத்தாமல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலைச் செய்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக முடிவில்லாமல் இந்த போர் நீண்டு வருகிறது. போரின் போது ரஷ்யப்படைகளின் கட்டுப்பாட்டிற்குள் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன.
அந்த வகையில் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஜாபோர்ஷியா, கெர்சன் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களை ரஷ்ய அரசாங்கம் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது சட்டவிரோதமான செயல் எனக்கூறி உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை நிராகரித்தன.
அதேசமயம் ரஷ்ய நாட்டின் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கெர்சன் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை நேற்று ரஷ்ய அதிபர் புதின் நேரில் காண திடீர் பயணம் மேற்கொண்டார். கெர்சன் பிராந்தியத்துக்கு அதிபர் புதின் ஹெலிகாப்டர் மூலம் சென்றார். பின்னர் அங்குள்ள ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர், மூத்த ராணுவ அலுவலர்களை சந்தித்து அங்கு நிகழ்ந்து வரும் களநிலவரங்கள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அதன்பின்னர் லுஹான்ஸ்க் பிராந்தியத்திற்குச் சென்று ராணுவ வீரர்களுடன் அதிபர் புதின் கலந்துரையாடினார். இந்த இரண்டு இடங்களிலும் ராணுவ வீரர்களுக்கு ஈஸ்டர் பண்டிகையின் வாழ்த்துக்களை அதிபர் புதின் தெரிவித்தார். அதேசமயம் அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் கொடுத்தார்.
உலகம் முழுவதும் இந்த போருக்காக எதிர்ப்பு கண்டனங்கள் அதிகரித்து வந்தாலும், ரஷ்ய அதிபர் புதின் தனது நிலையிலிருந்து மாறாமல் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதலைச் செய்து வருகிறார். இந்தப் போரினால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரங்களையும், உயிர்களையும் இழந்துள்ளனர்.
இந்த உலகம் தொடங்கியதில் இருந்து பல அளிக்க முடியாத வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்படிப்பட்ட முக்கிய வரலாற்றுச் சம்பவங்களில் இந்த உக்கிரன் - ரஷ்யா போரும் மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவமாக நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்