தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Reliance Retail Launched Fashion & Lifestyle Departmental Store Format Named As Reliance Centro

Reliance centro: சென்ட்ரோ என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆடையகம் திறப்பு!

Sep 29, 2022, 11:22 PM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆடைகள் விற்பனைக்காகவே ரிலையன்ஸ் சென்ட்ரோ என்ற ஷோரூம்மை ரிலையன்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆடைகள் விற்பனைக்காகவே ரிலையன்ஸ் சென்ட்ரோ என்ற ஷோரூம்மை ரிலையன்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆடைகள் விற்பனைக்காகவே ரிலையன்ஸ் சென்ட்ரோ என்ற ஷோரூம்மை ரிலையன்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

எலெக்ட்ரிக் சாதனங்களுக்கு ரிலையன்ஸ் டிஜிட்டல், மளிகை பொருள்களுக்கும் ரிலையன்ஸ் ப்ரஷ், ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு ரிலையன்ஸ் ஸ்மார்ட் ஹோம் என ஒவ்வொன்றும் தனித் தனி ஷோரூம்களை வைத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ஆடைகளுக்கு என பிரத்யேகமாக ரிலையன்ஸ் சென்ட்ரோ என்ற ஷோரூம்மை திறந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Elon Musk arrives in China: இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த சில நாட்களில் சீனா சென்ற பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்!

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி வாக்கத்தான்

திண்ணை பள்ளியில் கல்வி.. தமிழ் எங்கள் மூச்சு.. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த உ.வே.சா..!

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களுக்கான டிபார்ட்மென்டல் ஸ்டோராக ரிலையன்ஸ் சென்ட்ரோ தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிராண்டின் முதல் ஷோரூம் தில்லியிலுள்ள வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் சென்ட்ரோ மூலம் பேஷன் துறையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதில் ஆடை, காலணி, காஸ்மெட்டிக்ஸ், உள்ளாடைகள் என அனைத்து உயர்தர வகையான பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் கடையில், அறிமுக தள்ளுபடியாக ரூ.4,000க்கு பொருள்களை வாங்கினால் ரூ.1,500 தள்ளுபடியும், ரூ.5,000க்கு வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் பண்டிகை காலத்தில் இது ஒரு சிறந்த தள்ளுபடியாக அமைந்துள்ளது.